பனாரஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

பனாரஸ் கதை

ஒரு திருவிழாவில் கதையின் நாயகன் சித்தார்த் (ஜையீத் கான்) கதாநாயகியை (தானி ) பார்க்கிறார், அப்படி அவர் தானியை பார்த்தவுடனே அவரிடம் சென்று பேசுகிறார் , அப்போது சித்தார்த் எதிர்காலத்திலிருந்து திரும்பி வந்ததாக தானியிடம் சொல்கிறார் அதுமட்டுமல்லாமல் நாம் இருவரும் கணவன் மனைவி நமக்கு குழந்தை கூட இருக்கிறது என்றும் தானியை பற்றி பல விஷயங்களையும் சொல்கிறார் , தானியும் இவர் கூறுவதை நம்பி பேச ஆரம்பிக்கிறார் , பிறகு சித்தார்த் மற்றும் தானியும் நெருக்கமாக இருக்கும் போட்டோவை சித்தார்த் அவரின் நண்பர்களுக்கு காட்டுகிறார் அந்த போட்டோ இணையத்தளத்தில் பரவியதால் தானி சித்தார்த் மீது கோபம் கொண்டு சென்னையிலிருந்து பனாரஸ்-க்கு சென்றுவிடுகிறார் பிறகு மன்னிப்பு கேட்பதற்காக சித்தார்த் தானியை தேடி பனாரஸ் செல்கிறான் அப்போது சித்தார்த் ஒரு டைம் லூப்பில் மாட்டிக்கொள்கிறார் , இந்த டைம் லூப்பிற்குள் இவர் எப்படி மாட்டிக்கொண்டார் என்பதும் அதிலிருந்து அவர் வெளியே வந்தாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…

படத்தில் சிறப்பானவை
கதை
பின்னணி இசை
ஒளிப்பதிவு
அறிமுக நடிகர் ஜையீத் கானின் நடிப்பு

படத்தில் கடுப்பானவை
சுவாரஸ்யமற்ற திரைக்கதை மற்றும் ஒருசில காட்சிகள்
மெல்ல நகரும் முதல்பாதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *