ப்ரோக்கன் ஸ்கிரிப்ட் தமிழ் திரைப்பட விமர்சனம்

ப்ரோக்கன் ஸ்கிரிப்ட் கதை

கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகி ஒரு ட்ராவல் ஏஜென்சியில் வேலை செய்கிறார். இந்த ஏஜென்சி சிங்கப்பூரில் இருக்கிறது. நாயகிக்கு அந்த ஏஜென்சி வருடத்திற்கு ஒரு இலவச விமான டிக்கெட் கொடுக்கிறார்கள். அப்படி நாயகிக்கு சென்னைக்கு வர டிக்கெட் கிடைக்கிறது, அப்படி சென்னை வந்த நாயகி தன் நண்பரை சந்திக்கிறார். அப்படி சந்திக்கும் இடத்தில் ஒரு மர்ம நபர் நாயகியை பற்றி விசாரிக்கிறார்.

சில நாட்கள் கழித்து சிங்கப்பூர் செல்லும் அந்த நபர், நாயகியை நேரில் சென்று சந்திக்கிறார். அதே சமயம் உடல் உறுப்பு திருட்டு குறித்து சில விஷயங்களும் நடக்கிறது. நாயகியின் அப்பா வேலை இழந்து கஷ்டப்படும் சமயத்தில். நாயகியும், அவரின் தம்பியும் ஆளுக்கொரு வீட்டில் சென்று திருட முயற்சிக்கின்றனர். அப்படி இவர்கள் போட்ட திட்டத்தின்படி, வீட்டில் திருடிவிட்டு தப்பித்தார்களா? இல்லையா? என்பதும் மேலும் திடுக்கிடும் சில திருப்பங்களே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை அறிமுக இயக்குனர் ஜோ ஜியோவானி சர்ஜீத் சிங் நடித்து இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

அனைவரின் நடிப்பு
ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை

நம்மை படத்துடன் இணைக்காத கதைக்களம்
மேலும் மெழுகேற்றப்படாத திரைக்கதை
இசை

Rating: ( 2.25/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைமாஸ் மகாராஜா ரவி தேஜாவின் பான் இந்திய திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ டீஸர் வெளியானது !
அடுத்த கட்டுரைமத்தகம் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்