மிர்ச்சி விஜய்-அஞ்சலி நாயர் நடித்திருக்கும் ’WIFE’ படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வை வெளியாகியுள்ளது!

ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் தயாரிப்பில் வெளியாகியுள்ள படங்கள் விமர்சகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் ஹேமநாதன் ஆர் இயக்கத்தில் மிர்ச்சி விஜய் மற்றும் அஞ்சலி நாயர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘WIFE’ படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் கதையின் முக்கியத்துவம் பற்றி இயக்குநர் ஹேமநாதன் ஆர் கூறுகையில், “கணவன் – மனைவிக்கு இடையிலான…

Read More

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் “எமக்குத் தொழில் ரொமான்ஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

T Creations சார்பில் தயாரிப்பாளர் M திருமலை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் “எமக்குத் தொழில் ரொமான்ஸ்”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி நட்சத்திர நடிகர்கள் விஜய் சேதுபதி ஆர்யா மற்றும் பல பிரபலங்கள் வெளியிட்டனர். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, தொடர்ச்சியாக வெற்றி படைப்புகளை தந்து வரும் நடிகர் அசோக் செல்வன், நடிகை அவந்திகா மிஸ்ரா உடன் இணைந்திருக்கும்,…

Read More

‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் முதல் பார்வையை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார்

G.N. அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், ‘வெள்ளைக்கார துரை’, ‘தங்கமகன்’ ‘மருது’, ‘ஆண்டவன் கட்டளை’, உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. ‘இங்க நான் தான் கிங்கு’ என்ற இப்படத்தின் தலைப்பையும் முதல் பார்வை போஸ்டரையும் உலகநாயகன் கமல் ஹாசன் இன்று வெளியிட்டார். அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது. மேலும், சந்தானத்தின் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது….

Read More

நடிகை சோனா ஹைடனின் ‘ஸ்மோக்’ வெப் சீரிஸ் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

அஜித்குமார் நடித்த ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது நடிப்பு பயணத்தை துவங்கியவர் நடிகை சோனா ஹைடன். கடந்த இருபது வருடங்களில் நன்கு உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் தன்னை பன்முக திறமை கொண்ட நடிகையாக தன்னை செதுக்கிக் கொண்டுள்ளார். தற்போது அவருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் பதிவாக உருவாகும் ‘ஸ்மோக்’ என்கிற வெப் சீரிஸ் மூலமாக அவர்…

Read More

விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘உறியடி’, ‘ஃபைட் கிளப்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.‌ இதனை முன்னணி நட்சத்திர நடிகரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘சேத்துமான்’ படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘எலக்சன்’. இதில் விஜய்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘அயோத்தி’…

Read More

‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

பாலு மகேந்திராவின் ‘சினிமா பட்டறை’ மாணவரான அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. இதில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார். இவர்களுடன் மைம் கோபி, அருள் தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜே. பி. தினேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா…

Read More

M.சசிகுமார் & லிஜோமோல் ஜோஸ் நடிப்பில், “ஃபிரீடம் ஆகஸ்ட் 14” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது!!

விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், M.சசிகுமார் மற்றும் லிஜோமோல் ஜோஸ் நடிப்பில், கழுகு புகழ் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உருவாகி வரும் புதிய திரில்லர் டிராமா திரைப்படம் “ஃபிரீடம் ஆகஸ்ட் 14”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், கன்னட நடிகர் கிச்சா சுதீப், இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், மலையாள நடிகர் உன்னி முகுந்தன், இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் ஆகியோர் இணைந்து, சமூக வலைத்தளம் வழியாக வெளியிட்டனர். மிக…

Read More

இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘பேபி ஜான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது

இயக்குநர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘பேபி ஜான்’. இதில் பாலிவுட் நட்சத்திர நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக…

Read More

ஷாம் நடிக்கும் ‘அஸ்திரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் , நடிகர் ஷாம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘அஸ்திரம்’ எனப் பெயரிட்டுள்ளனர். கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார். கதாநாயகியாக மாடலிங் துறையைச் சேர்ந்த நிரஞ்சனி நடிக்க, முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‘ஐரா’, ‘எட்டு தோட்டாக்கள்’, ‘பொம்மை நாயகி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி ‘அஸ்திரம்’ படத்திற்கு…

Read More

அரிமாபட்டி சக்திவேல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

Life Cycle Creations சார்பில் தயாரிப்பாளர் பவன் K மற்றும் அஜிஸ் P ஆகியோர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரமேஷ் கந்தசாமி இயக்கத்தில் சமூக அக்கறைமிக்க சோஷியல் டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள படம் “அரிமாபட்டி சக்திவேல்”. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை முன்னணி இயக்குநர்கள் கே எஸ் ரவிக்குமார், கரு பழனியப்பன், தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு இணைந்து வெளியிட்டுள்ளனர். இந்தத் திரைப்படம் திருச்சி அருகே ஒரு கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கிராமமே…

Read More