“டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

தி காஷ்மீர் ஃபைல்ஸ், கார்த்திகேயா 2, என இந்திய அளவில் பிளாக்பஸ்டர்களை வழங்கிய அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தற்போது தென்னிந்தியா மற்றும் வட இந்தியா முழுமைக்குமான ஒரு பான் இந்திய திரைப்படமான “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்துடன் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது. இந்தியா முழுதும் ரசிகர்களை கொண்டிருக்கும் மாஸ் மகாராஜா ரவிதேஜா இப்படத்தில் நடிக்கிறார். இயக்குநர் வம்சி இயக்க, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அபிஷேக் அகர்வால் இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இப்படத்தின் துவக்கமே அனைவரது புருவத்தையும்…

Read More

‘என்டிஆர் 30’ படத்திற்கு ‘தேவாரா’ என்று பெயரிடப்பட்டு, அவரின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் பார்வையை என்டிஆர் வெளியிட்டுள்ளார்

‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் உலகளாவிய வெற்றிக்குப் பிறகு, என்டிஆர் தற்போது தனது ஜனதா கேரேஜ் இயக்குநரான கொரடலா சிவாவுடன் ‘என்டிஆர் 30’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் மூலம் தெலுங்கில் ஜான்வி கபூர் மற்றும் சைஃப் அலி கான் ஆகியோர் அறிமுகமாகின்றனர். இதில் சைஃப் அலிகான் வில்லனாக நடிக்கிறார். இந்த ஆண்டு, என்டிஆர் பிறந்தநாள் அவரது தீவிர ரசிகர்களுக்கு இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலாக மாறியது. ஏனெனில், ‘என்டிஆர் 30’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை அவரே இன்று…

Read More

அசோக் செல்வன் – சரத்குமார் இணையும் ‘போர் தொழில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அப்ளாஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தினைத் தயாரித்திருப்பதன் மூலம் தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமாக தடம் பதிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், வெளியீட்டு தேதியையும் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் காவலர்களாக நடித்திருக்கும் அசோக் செல்வன் மற்றும் ஆர். சரத்குமார் ஆகியோர்களின் வித்தியாசமான தோற்றம், ரசிகர்களை வெகுவாக…

Read More

‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா நடிக்கும் டைகர் நாகேஸ்வரராவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிப்பு

‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா -இயக்குநர் வம்சி -அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் கூட்டணியில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் பான் இந்திய திரைப்படமான ‘டைகர் நாகேஸ்வரராவ்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் போஸ்டர் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் வம்சி இயக்கத்தில், ‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா கதையின் நாயகனாக நடித்து வரும் பான் இந்திய திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்’. இந்தத் திரைப்படத்தை ‘ அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனம்…

Read More

மூன்று மதத் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட “பாய் – Sleeper Cells” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

வழக்கமாகத் திரையுலகப் பிரமுகர்களைக் கொண்டுதான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் , போஸ்டர், டிரைலர்கள் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், ஒரு வித்தியாசமான முயற்சியாக மூன்று மதத் தலைவர்கள் இணைந்து ஒரு திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்தப் படம் “பாய் (BHAI) ஸ்லீப்பர் செல்ஸ்”. இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார். கே ஆர் எஸ் ஃபிலிம்டாம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீ நியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு…

Read More

உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் ‘கூடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழில் புதிய முயற்சிகளுக்கு எப்போதும் மக்களின் ஆதரவு உண்டு. அந்த வகையில் ஸ்கைமூண் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் ஏ எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘கூடு’ என்ற பெயரில் புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது. இதன் டைட்டில் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஜோயல் விஜய் இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தை M கணேஷ் மற்றும் கண்ணன் P ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தில் நடிக்கும் நடிகர்,…

Read More

ஜி வி பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து நடிக்கும் ‘டியர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

‘இசை அசுரன்’ ஜி. வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷுடன் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘டியர்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘செத்தும் ஆயிரம் பொன்’ எனும் திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ டியர்’. இப்படத்தில் முதன்முறையாக ஜி. வி. பிரகாஷ் குமார்- நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம், ‘பிளாக் ஷீப்’ நந்தினி…

Read More

‘சமூக விரோதி’ டைட்டில் லுக் வெளியானது !

தொல். திருமாவளவன்,தோழர் க. பாலகிருஷ்ணன்,வன்னி அரசு,விஜய் சேதுபதி, சசிகுமார் , சமுத்திரகனி, நாஞ்சில் சம்பத், திண்டுக்கல் லியோனி, இயக்குனர் ராஜீ முருகன்,வாணி போஜன் சினேகன், கலையரசன், போஸ் வெங்கட் என 30 பேர் வெளியிட்ட ‘சமூக விரோதி ‘டைட்டில் லுக்! தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக ஒரு திரைப்படத்தின் முதல் பார்வையை பல்வேறு துறைகளைச் சார்ந்த 30 பேர் தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். சீயோனா ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் ‘சமூக விரோதி ‘என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது….

Read More

“மாமன்னன்” படத்தின் First Look போஸ்டர் வெளியானது

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். “மாமன்னன்” படத்தின் First Look போஸ்டர் இன்று வெளியாகி பலரது பாராட்டைப் பெற்று வருகிறது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”– மாமன்னன் 🤴 Here’s another powerful poster of #MAAMANNAN 👑@Udhaystalin @mari_selvaraj…

Read More

‘கள்வா’ குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது

மர்யம் தியேட்டர்ஸ் வழங்கும் ‘கள்வா’ குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘தீர்க்கதரிசி’ படக்குழுவை சேர்ந்த நடிகர்கள் அஜ்மல், துஷ்யந்த், ஜெய்வந்த், ஸ்ரீமன் ஆகியோர் வெளியிட நடிகை தான்யா ரவிச்சந்திரன் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் ‘கள்வா’ குறும்படத்தின் இயக்குனர் ஜியா, இசையமைப்பாளர் ஜேட்ரிக்ஸ், ஒளிப்பதிவாளர் ஷரண் தேவ்கர் சங்கர், கதாநாயகி அட்சயா ஜெகதீஷ், கதாசிரியர் அப்சல், இணை இயக்குனர் ரெங்கா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் அஜ்மல் பேசும்போது, ‘குறும்படங்கள்தான் இப்போதெல்லாம் பெரிய…

Read More