டி3 தமிழ் திரைப்பட விமர்சனம்

டி3 கதை

2018 குற்றாலம் : ஒரு பெண் வீட்டில் தனியாக இருக்கிறார் அப்போது அவருக்கு ஒரு புதிய நம்பரில் இருந்து போன் வருகிறது அதனை எடுத்து காதில் வைத்து , ஒரு மாதிரி நடந்து வெளியே செல்கிறார். அப்போது ஒரு லாரி அவர் மீது மோதி அங்கேயே இறந்துவிடுறார்.

அதன் பிறகு மூன்று வருடங்கள் கழித்து 2021 ம் ஆண்டு அங்கு உள்ள D3 போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டு பதவி ஏற்கிறார் கதையின் நாயகன் விக்ரம் , அப்போது 2018 ம் ஆண்டு நடந்த மாதிரியே சிலசம்பவங்கள் நடக்கிறது, அதனை கண்டுபிடித்த விக்ரம் இது எதற்காக நடக்கிறது இதன் பின்னணி என்ன , இதன் பின்னல் இருப்பது யார் என தேட தொடங்குகிறார் , ஆனால் பல பிரச்சனைகள் இவருக்கு வந்துகொண்டே இருக்கிறது . விக்ரம் அனைத்தையும் சமாளித்து இந்த செயலுக்கு பின்னணி என்ன மற்றும் இதனை செய்தது யார் என கண்டுபிடித்தாரா ?இல்லையா ? எனபதுதான் படத்தின் மீதி கதை…

Read Also : Kudimahaan Movie Review

இந்த கதையினை இயக்குனர் பாலாஜி இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை
கதைக்கரு
நடிகர் பிரஜின் நடிப்பு
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
ஸ்ரீஜித் எடவானா- வின் பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை
சில படங்களின் சாயல்
படத்தின் வேகத்தை குறைக்கும் ஒரு பாடல்

Rating : ( 2.75/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *