ஃபைட் கிளப் கதை
மீனவ மக்கள் வாழும் பகுதியில் பெஞ்சமின் என்று ஒருவர் இருக்கிறார், இவர் குத்துச்சண்டையில் சிறந்தவர். ஆனால் சில காரணங்களால் இவரால் குத்துச்சண்டையில் சாதிக்க முடியாமல் போகிறது. அதனால் தன் பகுதியில் இருக்கும் பசங்களுக்கு சில உதவிகள் செய்கிறார். குறிப்பாக விளையாட்டில் ஆர்வமுள்ள கதையின் நாயகன் செல்வத்திற்கு (விஜய் குமார்) அதிகமாக உதவுகிறார், மற்றும் ஊக்குவிக்கிறார். பெஞ்சமின் தம்பி ஜோசப், கிருபா என்ற ஆளோடு இணைந்து கஞ்சா விற்கிறார், இதனை அறிந்த பெஞ்சமின் இவர்களை கண்டிக்கிறார், இதனால் கோபமடைந்த கிருபாவும், ஜோசப்பும் சேர்ந்து பெஞ்சமினை கொலைசெய்துவிடுகின்றனர்.
Read Also: Kannagi Tamil Movie Review
ஜோசப் தன் அண்ணன் பெஞ்சமினை கொலை செய்ததற்காக சிறைக்கு செல்கிறார். ஜோசப் சிறையிலிருந்து வெளியே வரும்போது கிருபா, மிகப்பெரிய அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். கிருபா மீது கோபம்கொண்ட ஜோசப், கிருபாவிற்கு எதிராக நாயகன் செல்வதை தூண்டிவிடுகிறார். செல்வம், கிருபவை பழிவாங்க துடிக்கிறார், கடைசியில் யார் வாழ்ந்தார்? யார் வீழ்ந்தார்? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் அப்பாஸ் ரஹ்மத் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கதாபாத்திரத்திற்கு ஏற்ற விஜய்யின் நடிப்பு
➡அனைவரின் நடிப்பு
➡பின்னணி இசை
➡சன்டைக்காட்சிகள்
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
➡இரண்டாம்பாதியில் வலுவிழந்த திரைக்கதை
➡தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும் சண்டைக்காட்சிகள்
➡ஒருசில லாஜிக் மீறல்கள்
Rating: ( 2.75/5 )


























