ஜெண்டில்வுமன் கதை
பூரணி, அரவிந்த் இவர்கள் புதுமணத்தம்பதிகள். இவர்கள் இருவரும் சென்னையில் சந்தோசமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பூரணியின், தோழியின் தங்கை தீபிகாவிற்கு சென்னையில் நேர்காணல் இருப்பதால் இவர்களின் வீட்டில் தங்குவதற்கு பூரணி தன் கணவர் அரவிந்திடம் அனுமதி கேட்க, அரவிந்தோ வேலையின் காரணமாக வெளியில் செல்வதால் உனக்கும் துணையாக இருக்கும் என சொல்லி தீபிகாவிற்க்கு அனுமதிகொடுக்கிறார்.
Read Also: Kingston Tamil Movie Review
பூரணி வீட்டில் இல்லாத சமயத்தில், அரவிந்த் தீபிகாவிடம் அத்துமீறி நடந்துகொள்கிறார். அப்போது அரவிந்திடம் இருந்து தப்பிக்க தீபிகா முயற்சிசெய்யும்போது தவறுதலாக தலையில் அடிபட்டு அரவிந்த் இறந்துவிடுக்கிறார். வீட்டிற்கு வந்து இதனை பார்த்த பூரணி அதிர்ச்சி அடைகிறார், அதே நேரத்தில் கணவனுக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதையும் அறிகிறார், இதற்கடுத்து பூரணி என்னவெல்லாம் செய்தார் என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை ஜோஷ்வா சேதுராமன் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡லிஜோமோல் & லாஸ்லியா வின் சிறப்பான நடிப்பு
➡கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படம் எடுக்கப்பட்ட விதம்
படத்தில் கடுப்பானவை
➡மெல்ல நகரும் கதைக்களம்
ரேட்டிங்: ( 2.75 / 5 )