ஹர்காரா கதை
ஈசன் மலை என்கிற, மலை கிராமத்திற்கு அஞ்சல்காரராக காளி வெங்கட் செல்கிறார். அங்கு சென்றபிறகு அவரால் ஒரு மாதம் கூட அங்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை. காரணம் அந்த ஊர் மக்கள் பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக இருக்கிறார்கள். மற்றும் இரவில்கூட தூங்கவிடாமல் ஏதாவது வேலை சொல்லிக்கொண்டே இருக்கின்றனர்.அப்போது காளிவெங்கட் ஒரு திட்டம் போடுகிறார், இந்த ஊருக்கு தபால்நிலையமே வேண்டாம் என ஒருமனு எழுதி, ஊர் மக்களுக்கே தெரியாமல் கைநாட்டு வாங்குகிறார்.
Read Also: Adiyae Movie Review
அந்த சமயத்தில் ஒரு கடிதம் வருகிறது, அந்த கடிதத்தை கொடுக்க இந்த மலைகளை தாண்டி செல்லவேண்டுமா, என யோசிக்கும் சமயதில் அங்கு ஒரு வழிப்போக்கன் வருகிறான். அந்த வழிப்போக்கன் காளி வெங்கட் அவரிடம், இந்த ஊரில் ஹர்காரா என்ற போஸ்ட்மேன் 150 வருடத்திற்கு முன் இருந்தார், அவரை இந்த கிராம மக்கள் கடவுளாக வழிபடுகின்றனர், என சொல்கிறார். அப்படி இந்த மக்கள் ஹர்காரா-வை கடவுளாக கொண்டாட காரணமும். அதன் பின் என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் ராம் அருண் கேஸ்ட்ரோ நடித்து இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
⚫கதைக்கரு
⚫வசனம்
⚫கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
⚫பின்னணி இசை
⚫ஒளிப்பதிவு
⚫படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
⚫மேலும் மெழுகேற்றப்படாத திரைக்கதை
⚫மெல்ல நகரும் முதல்பாதி கதைக்களம்
Rating: ( 3/5 )