‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ டீசரை வெளியிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள்

ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பான்-இந்தியா திரைப்படமான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ டீசரை இன்று மதியம் 12:12 மணிக்கு பான்-இந்தியா அளவிலான முன்னணி நட்சத்திரங்கள் வெளியிட்டனர்.

ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா முதல் முறையாக இணைந்து நடிக்கும் இப்படத்தின் டீசரை, தமிழில் தனுஷும், தெலுங்கில் மகேஷ் பாபுவும், மலையாளத்தில் துல்கர் சல்மானும், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டியும் வெளியிட்டனர்.

வழக்கமான டீசரையும் தாண்டி அமைந்துள்ள இந்த காணொலிக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாக வரவேற்பை அளித்து வருகின்றனர்.

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல புதிய மற்றும் சுவாரசியமான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று நிறைவடைந்துள்ள நிலையில், திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.

தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் கூறுகையில், “இந்த பிரமாண்டமான திரைப்படம் அதிகப் பொருட்செலவில் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை திரைக்கு கொண்டு வர நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், “எங்கள் அனைவருக்கும் மிகவும் திருப்தியளிக்கும் அனுபவமாக ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ அமைந்துள்ளது. மிகவும் அழகான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ வழங்கும் என்று நான் நம்புகிறேன். இந்த மிகப்பெரிய படத்திற்கு ஆதரவளித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி,” என்றார்.

விறுவிறுப்பான ஆக்ஷன் திரைப்படமான ‘ஜிகதண்டா டபுள் எக்ஸ்’ பல்வேறு மொழிகளில் வெளியாகிறது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான அதிரடி நகைச்சுவை கலந்த மாபெரும் வெற்றிப் படமான ‘ஜிகர்தண்டா’வைப் போலவே இந்தப் படமும் ஆக்ஷன் கேங்ஸ்டர் கதையமைப்பில் உருவாகிறது.

‘மெர்குரி’ மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ போன்ற படங்களில் கார்த்திக் சுப்பராஜுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய, தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திரு, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார். ‘ஜிகர்தண்டா’ உட்பட கார்த்திக் சுப்பராஜின் பல படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ‘ஜிகர்தண்டா’வை எடிட்டிங் செய்து தேசிய விருது பெற்ற விவேக் ஹர்ஷனின் உதவியாளரான ஷஃபிக் முகமது அலி படத்தொகுப்பை கையாளுகிறார்.

பல திருப்பங்கள் நிறைந்த ஜிகர்தண்டாவை போல் இப்படமும் இன்னும் விறுவிறுப்புடன் கூடிய ஒரு டிரெண்ட் செட்டர் படமாக அமையும் என்று படக்குழு உறுதி செய்துள்ளனர்.

ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்காக கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ டீசரை பான்-இந்தியா நட்சத்திரங்கள் இன்று வெளியிட்டனர்.

படக்குழுவினர்:

இயக்கம்: கார்த்திக் சுப்பராஜ்

இசை: சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு: எஸ். திருநாவுக்கரசு

படத்தொகுப்பு: ஷஃபிக் முகமது அலி

தயாரிப்பு வடிவமைப்பாளர்: டி. சந்தானம்

சண்டை பயிற்சி: திலிப் சுப்பராயன்

கலை இயக்கம்: பாலசுப்ரமணியன், குமார் கங்கப்பன்

நடன அமைப்பு: ஷெரிப் எம், பாபா பாஸ்கர்

ஒலி வடிவமைப்பு: குணால் ராஜன்

ஆடை வடிவமைப்பாளர்: பிரவீன் ராஜா

ஒப்பனை: வினோத். எஸ்

ஆடைகள்: சுபேர்

பாடல்கள்: விவேக், முத்தமிழ் ஆர் எம் எஸ்

ஸ்டில்ஸ்: எம். தினேஷ்

VFX மேற்பார்வையாளர்: எச் மோனேஷ்

கலரிஸ்ட்: ரங்கா

பப்ளிசிட்டி டிசைன்ஸ்: ட்யூனி ஜான் (24 AM)

டீசர் கட்: ஆஷிஷ்

சவுண்ட் மிக்ஸ்: சுரேன். ஜி

ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர்: கணேஷ் பி.எஸ்

தயாரிப்பு நிர்வாகி: ஜி. துரைமுருகன்

தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்: ராஜ்குமார்

தயாரிப்பு மேலாளர்கள்: என். சண்முக சுந்தரம், ரங்கராஜ் பெருமாள்

நிர்வாகத் தயாரிப்பாளர்: அசோக் நாராயணன். எம்

அசோசியேட் தயாரிப்பாளர்: பவன் நரேந்திரா

இணை தயாரிப்பு: கல் ராமன், எஸ். சோமசேகர், கல்யாண் சுப்ரமணியம்

இணை தயாரிப்பாளர்: அலங்கர் பாண்டியன்

டைரக்ஷன் டீம்: சீனிவாசன், ஆனந்த் புருஷோத், கார்த்திக் வி.பி., விக்னேஸ்வரன், ஜெகதீஷ், அரவிந்த் ராஜு ஆர், மகேஷ் பாலு, சூரஜ் தாஸ், சாய், முருகானந்தம், ராகுல். எம், அவினாஷ் ஆர், மோகன் குமார். ஆர்.

மக்கள் தொடர்பு: நிகில் முருகன், வம்சி காக்கா, இப்ராஹிம் காண்ட்ராக்டர்

தயாரிப்பு: கார்த்திகேயன் சந்தானம், எஸ். கதிரேசன்

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here