கிடா கதை
மதுரையில் ஒரு கிராமத்தில், தீபாவளி சமயத்தில் பேரன் கதிர் டிவியில் விளம்பரத்தில் வரும் துணியை பார்த்துவிட்டு, அதே போல் புதுத்துணி வேண்டும் என்று தன் தாத்தாவிடம் கேட்கிறான். தாத்தா செல்லையா- விற்கு புதுத்துணி வாங்க 2000 ரூபாய் தேவைப்படுவதால், பலரிடம் பணம் கேட்டு பார்க்கிறார். கடைசியில் தன் மகன்களிடமும் கேட்டு பார்க்கிறார் யாரும் பணம் கொடுக்கவில்லை, வேறுவழியில்லாமல் தான் ஆசையாக வளர்த்த கிடாவை விற்க முடிவெடுக்கிறார்.
Read Also: Jigarthanda DoubleX Movie Review
கறிக்கடையில் வேலை செய்யும் வெள்ளைச்சாமி, தன் ஓனரின் மகனிடம் சண்டைபோட்டு வேலையிலிருந்து நின்றுவிடுகிறார். பிறகு தீபாவளி முதல் தான் புது கறி கடையை தொடங்க நினைக்கிறார். அதற்கான கிடாவை செல்லையாவிடம் இருந்து வாங்கும் சமயத்தில் கிடா தொலைந்துவிடுகிறது. பிறகு கிடா கிடைத்ததா? இல்லையா? என்பதும் தாத்தா செல்லையா தன் பேரனுக்கு புதுத்துணி வாங்கிக்கொடுத்தாரா? இல்லையா? என்பதும் வெள்ளைச்சாமி புது கறி கடையை தொடங்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் ரா.வெங்கட் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡அனைவரின் எதார்த்த நடிப்பு
➡தாத்தா பேரனின் பாசம்
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡வசனங்கள்
➡இயக்கம்
படத்தில் கடுப்பானவை
➡பெரிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை
Rating: ( 3.5/5 )