குய்கோ தமிழ் திரைப்பட விமர்சனம்

குய்கோ கதை

தங்கராஜ் ஒரு தனியார் டுடோரியலில் கணக்கு வாத்தியாராக வேலை செய்துகொண்டிருக்கிறார். ஒருசில காரணங்களால் அவருக்கு வேலை போகிறது. அப்போது சென்னையில் IPL மேட்ச் பார்ப்பதற்காக தன் மாமாவிடம் பணம் கேட்கிறார். அதே சமயம் மலையப்பனின் அம்மா இறந்துவிடுகிறார், அவரை வைப்பதற்கான ஐஸ் பெட்டி தங்கராஜ்-ன் மாமா கடையில் எடுக்கிறார்கள்.

Read Also: 80s Buildup Movie Review

மலையப்பா துபாயிலிருந்து வருவதற்கு 4 நாட்கள் ஆகும், ஐஸ் பெட்டியை மலையப்பனின் வீட்டிற்கு சென்று வைக்கும்போது அங்கு ஒருசில பிரச்சனைகள் நடக்கிறது, அந்த பிரச்சனையால் தங்கராஜ் அந்த ஊரிலேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. தங்கராஜ் அந்த பிரச்சனையை தீர்த்து IPL மேட்ச் பார்க்க சென்றாரா? இல்லையா? என்பதும் மலையப்பா ஏன் துபாய் சென்றார் என்பதும், மற்றும் அவரின் அம்மாவின் இறுதி சடங்கை முடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை அறிமுக இயக்குனர் அருள் செழியன் மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
➡கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
➡வசனங்கள்
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை

➡பெரிதாக குறைசொல்வதற்கு எதுவும் இல்லை

Rating: ( 3.75/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *