80ஸ் பில்டப் தமிழ் திரைப்பட விமர்சனம்

80ஸ் பில்டப் கதை

கதையின் நாயகன் கதிர் பெரிய ஜமீன்தார் குடும்பத்தை சேர்ந்தவர். கதிருக்கும் அவரின் தங்கை மஞ்சகனிக்கும் எப்போதும் சண்டை நடந்துகொண்டிருக்கும், நாயகன் கதிர் ஒரு கமல் ரசிகன், அவரின் தாத்தா ஒரு ரஜினி ரசிகர். ஒருநாள் கமலின் சகலகலா வல்லவன் திரைப்படம் வெளியாகும் அன்று கதிரின் தாத்தா இறந்துவிடுகிறார், இதனால் கொண்டாட்டத்தை விட்டுவிட்டு கதிர் வீட்டிற்கு செல்கிறார்.

Read Also: Joe Movie Review

வீட்டிற்கு சென்று பார்த்தால் கதிரின் அக்கா மகள் தேவி வந்திருப்பார், தேவியை பார்த்ததும் கதிர் காதல் வயப்படுகிறார், அதனை கவனித்த கதிரின் தங்கை மஞ்சக்கனி, கதிரிடம் சவால் விடுகிறார், தாத்தாவின் இறுதி சடங்கிற்குள் தேவி உன்னிடம் வந்து ஐ லவ் யூ சொல்லவேண்டும் அப்படி சொன்னால் தான் மொட்டை அடித்துக்கொள்வதாகவும் சொல்கிறார், ஒரு வேலை கதிர் தோற்றால் 3 மாதம் தாவணி கட்டவேண்டும் இதுதான் இவர்களுக்குள் இருக்கும் போட்டி, தாத்தாவின் இந்த திடீர் மரணத்திற்கு என்ன காரணம் என்பதும், இந்த போட்டியில் யார் வென்றார் என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் கல்யாண் அவருக்கே உண்டான பாணியில் சற்று கலகலப்பாக இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡சந்தானம், ராதிகா ப்ரீத்தி, ஆனந்த் ராஜ் இவர்களின் அசத்தலான நடிப்பு
➡கதாபாத்திரத்திற்கு உயர் கொடுத்த மற்ற அனைவரின் நடிப்பு
➡ஜிப்ரானின் பின்னணி இசை
➡இடைவெளி & கிளைமேக்ஸ் ட்விஸ்ட்

படத்தில் கடுப்பானவை

➡பயன்படுத்தப்படாத சில கதாபாத்திரங்கள்
➡நாம் ஏற்கனவே பார்த்த சில படங்களின் சாயல்

Rating: ( 2.75/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *