லாக்கர் தமிழ் திரைப்பட விமர்சனம்

‘லாக்கர்’ கதை

கதாநாயகனும் அவரது நண்பர்களும் இணைந்து ஒரு வழிப்பறியில் இறங்குகிறார்கள்.தேர்தலில் மக்களுக்காக வாக்குக்குக் கொடுக்க எடுத்துச் செல்லப்படும் பல லட்ச ரூபாய் பணத்தை நூதனமான முறையில் மோசடி செய்து கைப்பற்றுகிறார்கள்.அப்படிப்பட்ட நாயகனை நிரஞ்சனி காதலிக்கிறார். காதலன் ஒரு மோசடிப் பேர்வழி என்று தெரிந்து விலக நினைக்கிறார். தன்னைப் பற்றித் தவறாக நினைத்த காதலியை விக்னேஷ் அறைந்து விடுகிறார்.விக்னேஷ் தன் தரப்பு நியாயத்தைச் சொல்ல விரும்புகிறார். அவர்கள் இருவரும் தனியே அமர்ந்து ஒரு காபி ஷாப்பில் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கே வரும் ஒருவரைப் பார்த்து பதற்றப்பட்ட நிரஞ்சனி, அந்த நபரைப் பற்றிக் காதலனிடம் கூறுகிறார்.

Read Also: Joe Movie Review

அவர் தன் குடும்ப சொத்துக்களை அபகரித்துக் குடும்பத்தை நடுத்தெருவில் விட்டு,தன்னை அனாதையாக்கியவர் என்கிறார் .அதனால் அவரைப் பழிவாங்க வேண்டும் என்று காதலனைத் தூண்டிவிடுகிறார். அந்த நபர் தான் சக்கரவர்த்தி. அவர் வெளிநாட்டிலிருந்து தங்கத்தை மோசடியாகக் கடத்தி வியாபாரம் செய்து வரும் கோல்டு மாபியா.அதன்படி காதலன் விக்னேஷ், தங்க மோசடி நபரின் லாக்கரிலிருக்கும் 6 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளைத் திருடத் திட்டமிடுகிறார்.தங்கள் திட்டப்படியே திருடியும் விடுகிறார்கள். அதன் பிறகு நடக்கும் திடுக் திடுக் சம்பவங்கள் தான் ‘லாக்கர்’ படத்தின் கதை செல்லும் பயணம்.

இந்த கதையினை இயக்குனர் ராஜசேகர் நடராஜன் இயக்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *