லைன் மேன் கதை
தூத்துக்குடியில் உப்பு தயாரிக்கும் இடத்தில் சுப்பையா லைன் மேனாக வேலை செய்கிறார். சில வருடங்களுக்கு முன்பு, சிலர் திருட்டுத்தனமாக மின்சாரம் எடுக்கும்போது அந்த ஒயரில் மாட்டி இவரின் மனைவி இறந்துவிடுகிறார். அதனை பார்த்த கதையின் நாயகன் செந்தில் வளர்ந்ததும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிக்கிறார்.
Read Also: Zebra Tamil Movie Review
கல்லூரி முடிந்ததும், தன் அம்மாவுக்கு நடந்தது போல் வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என்பதற்காக ஆராய்ச்சி செய்து ஒரு கருவியை கண்டுபிடிக்கிறார். அதனை அரசாங்கத்திடம் பதிவு செய்ய முயற்சிக்கிறார், ஆனால் முடியவில்லை. கதையின் நாயகன் அந்த கருவியை அரசாங்கத்திடம் பதிவு செய்தாரா? இல்லையா? என்பதும் இதன் பின் நடக்கும் அரசியல் என்ன என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் உதயகுமார் இயக்கியுள்ளார்.
இந்த லைன் மேன் திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.