லொஸ்லியா காதல் குறித்து நெத்தியடி பதில் !!

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவராகிய லாஸ்லியா அந்த நிகழ்ச்சியின்போது கவினை காதலிப்பதாக கூறிய நிலையில் தற்போது கவினுடன் உள்ள உறவு குறித்து நெத்தியடியான பதிலை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

https://www.youtube.com/watch?v=sY1Y1RVVTK4


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி பரபரப்பாக சென்றதற்கு முக்கிய காரணம் கவின் மற்றும் லாஸ்லியா காதல் தான். இந்த காதல் வெளியே வந்த பின்னரும் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த லாஸ்லியாவின் தந்தையால் காதல் முடிவுக்கு வந்தது போல் தெரிந்தது. ஆனால் மீண்டும் காதல் தொடர்ந்த நிலையில் இருவரும் வெளியே வந்து திருமணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஒருவரை ஒருவர் பார்த்து பேசக்கூட இல்லை என்ற தகவல்தான் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த லாஸ்லியா கவினுடனான உறவு குறித்த கேள்விக்கு, ‘அது தனது பெர்சனல் விஷயம் என்றும், அது பற்றி நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் நான் நடிக்கும் படங்கள் குறித்த கேள்விகளை மட்டும் கேளுங்கள் என்றும் நெத்தியடியாக பதில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது தர்ஷனை அண்ணன் என்று கூறிவிட்டு தற்போது அவருக்கு ஜோடியாக நடிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ‘அது பர்சனல் வாழ்க்கை, இது சினிமா வாழ்க்கை. நாங்கள் இருவரும் அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து விட்டு அதன் பின்னர் அந்த கதாபாத்திரங்களை மறந்து விடுவோம்’ என்று கூறியுள்ளார் லாஸ்லியாவின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிற
லாஸ்லியா ஏற்கனவே ஹர்பஜன்சிங் உடன் ‘ப்ரெண்ட்ஸ்’ என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் தர்ஷனுடன் ‘கூகுள் குட்டப்பன்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது

Image result for losliya kavin relationship
YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here