கவினை தாக்கும் லொஸ்லியா

உலக நாயகன் கமலஹாசன் கடந்த வருடம் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், கலந்து கொண்டு விளையாடி, கடைசியில் காதலர்கள் என பெயரெடுத்தவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது, இருவரும் காதலர்கள் போல் நடந்து கொண்டாலும் வெளியே வந்ததும், இருவருக்கும் சம்மந்தமே இல்லாதது போல் நடந்து கொண்டனர்ஆனால் இவர்களுடைய ஆர்மியை சேர்ந்தவர்களோ, விடா பிடியாக, ‘கவிலியா’ என்கிற பெயரில் இருவரும் இணைந்திருப்பது போல பல புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்ஒரு சில பேட்டிகளில் காதல் குறித்து பேச்சு எழுப்பிய போது, கவின் இப்போது தனக்கு நிறைய கடமைகள் உள்ளது என்றும், பின்பு தான் என்னுடைய வாழ்க்கை பற்றி சிந்திக்க முடியும் என தெரிவித்தார். அதே போல், லாஸ்லியா

இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பல, பேட்டிகளை தவிர்த்து விட்டார்தற்போது இருவருமே, அடுத்தடுத்து நடிக்கும் திரைப்படங்களில் பிஸியாகி உள்ளனர் என்பது நாம் அறிந்தது தான்பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகச் சிறந்த ஜோடி என்று கருதப்பட்ட கவின், லாஸ்லியா ஜோடிக்குள் தற்போது ஏதோ பிரச்சனை என தெரிகிறது.

 எனவே கவினை மறைமுகமாக லாஸ்லியா தாக்கி கருத்து பதிவிட்டுலாத தெரிகிறதுகவின் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கண்ணாடி முன் நின்று எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்து அதில் ’எடுக்காத டிரஸ்ல போட்டோ எடுத்து வச்சுகிட்டா எப்பயாவது உதவும்’ என்று குறிப்பிட்டு இருந்தார் இவர் இந்த பதிவை போட்ட,  அடுத்த சில நிமிடங்களில் லாஸ்லியா இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அதே போல் கண்ணாடி முன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து,  ’வாழ்க்கை உங்களுக்கு ஏதாவது கற்பிக்க முயற்சிக்கிறது, எனவே உங்கள் தவறுகளை ஏற்றுக்கொண்டு உங்களை கண்ணாடியில் பாருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.எனவே இந்த கருத்தின் மூலம் லாஸ்லியா, மறைமுகமாக கவினை விளாசியுள்ளார் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். இதில் எந்த அளவிற்கு உண்மை ஒளித்திருக்கிறது என்பதை கவின் மற்றும் லாஸ்லியா தான் கூற வேண்டும்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here