நடிகர் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படம் ஆகஸ்ட் 11, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது

சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரிப்பில் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் ஆகஸ்ட் 11, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

‘மாவீரன்’ படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. பின்னர் வெளியான படத்தின் முதல் பார்வை, ஹிட்டான ‘சீன் ஆ சீன் ஆ’ முதல் பாடல் என இவை அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘மண்டேலா’ புகழ் மடோன் அஷ்வின் எழுதி இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் ஒரு ஆக்‌ஷன் ஃபேமிலி என்டர்டெய்னராகும். இதில் அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘மாவீரன்’ திரைப்படம் ஆகஸ்ட் 11, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்வதில் படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளது.

‘மாவீரன்’ படத்தை ‘மண்டேலா’ புகழ் மடோன் அஷ்வின் எழுதி இயக்கியுள்ளார். சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கிறார். பரத் சங்கர் இசையமைத்துள்ள இதற்கு வித்து அய்யன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார். குமார் கங்கப்பன் & அருண் வெஞ்சாரமூடு (கலை இயக்கம்), யானிக் பென் (ஸ்டண்ட்ஸ்), சுரேன் ஜி & அழகியகூதன் (ஒலி வடிவமைப்பு), சந்துரு ஏ (கூடுதல் திரைக்கதை மற்றும் வசனம்), சுரேன் ஜி (ஒலி கலவை), தினேஷ் மனோகரன் (ஆடை வடிவமைப்பு), ஷையது மாலிக் (ஒப்பனை கலைஞர்), சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைமீண்டும் புதிய சாதனை படைத்திருக்கும் ராம்சரண்- உபாசனா தம்பதிகள்
அடுத்த கட்டுரைZEE5 தளத்தின்  “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு !