மாஸ் மஹாராஜா ரவி தேஜா-வின் “டைகர் நாகேஸ்வர ராவ்” அக்டோபர் 20 ஆம் தேதி வெளியாகிறது

அகில இந்திய அளவில் பிளாக்பஸ்டர் திரைப்படங்களை வழங்கிய அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தற்போது தென்னிந்தியா மற்றும் வட இந்தியா முழுமைக்குமான ஒரு பான் இந்திய திரைப்படத்தை மாஸ் மகாராஜா ரவிதேஜா முதன்மை பாத்திரத்தில் நடிக்க, பிரமாண்ட படைப்பாக “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தை தயாரித்து வருகிறது. இயக்குநர் வம்சி இயக்க, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அபிஷேக் அகர்வால் இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இப்படம் தசரா பண்டிகை அன்று அக்டோபர் 20ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பட்டிருந்த நிலையில், இப்படம் தாமதமாகலாம் என செய்தி பரவியது. இந்நிலையில் தயாரிப்பு தரப்பு இச்செய்தியினை மறுத்து கண்டிப்பாக தசரா பண்டிகையில் வெளியாகுமென அறிவித்துள்ளனர்.

அறிவிக்கப்பட்ட அக்டோபர் 20ஆம் தேதியில் #TigerNageswaraRao வெளியாகாது என்று ஆதாரமற்ற தகவல் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

சில தீய சக்திகள் இந்த வதந்திகளைப் பரப்புகின்றன, ஏனென்றால் எங்கள் படம் ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் தியேட்டர் சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து இப்படத்திற்கு முதல் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது, எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம். சிறந்த சினிமா அனுபவத்தை உங்களுக்கு வழங்க நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம் என தயாரிப்பு தரப்பு விளக்கமளித்திருக்கின்றனர்.

அக்டோபர் 20 முதல் பாக்ஸ் ஆபிஸில் “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தின் வசூல் வேட்டை தொடங்கும்” என தயாரிப்பாளர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு ராஜமுந்திரியில் உள்ள புகழ்பெற்ற ஹேவ்லாக் பாலத்தில்  (கோதாவரி) ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கான்செப்ட் வீடியோவை வெளியிட்டதன் மூலம் படத்தின் விளம்பரங்களை தயாரிப்பாளர்கள் முதன்முறையாக பிரமாண்டமாக தொடங்கினர். விரைவில் படத்தின் டீசரை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

இயக்குநர் வம்சி இப்படத்தை, ஒரு அதி அற்புதமான திரைக்கதையுடன் மிகப் புதுமையான வகையில் வழங்கவுள்ளார். இந்திய அளவில் பிரபலமான சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து மிக நவீனமான வகையில் ஒரு புதிய அனுபவத்தை வழங்கவுள்ளார்கள்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க, ஆர் மதி ஐஎஸ்சி ஒளிப்பதிவு செய்துள்ளார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதுகிறார், மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

இப்படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

எழுத்து – இயக்கம் : வம்சி
தயாரிப்பாளர்: அபிஷேக் அகர்வால்
தயாரிப்பு நிறுவனம் : அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ்
வழங்குபவர்: தேஜ் நாராயண் அகர்வால் இணை தயாரிப்பாளர்: மயங்க் சிங்கானியா வசனம்: ஸ்ரீகாந்த் விசா
இசையமைப்பாளர்: GV பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : R மதி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா
மக்கள் தொடர்பு : யுவராஜ்

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here