என்னையும் கைது செய்யுங்க – அலறவிடும் ஓவியா !!

என்னையும் கைது செய்யுங்கள் என நடிகை ஓவியா தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக இந்தியாவுக்கு பயன்படுத்தவேண்டிய தடுப்பூசியை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தது ஏன்? என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த போஸ்டர்கள் ஒட்டியவர்களை காவல்துறை கைது செய்து வருகிறது இதனை அடுத்து ஆவேசமடைந்த காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி அவர்கள் ’என்னையும் கைது செய்யுங்கள்’ என்று ஆவேசமாக டுவிட்டரில் பதிவு செய்தார். இதனை அடுத்து பல பிரபலங்களும் ’என்னையும் கைது செய்யுங்கள்’ என்ற ஹேஷ்டேக்கை தங்கள் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்றுமுன் நடிகை ஓவியா ’என்னையும் கைது செய்யுங்கள்’ என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்து ’இதுதான் ஜனநாயகமா? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளார். ஓவியாவின் இந்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நடிகை ஓவியா பிரதமர் மோடிக்கு எதிராக டுவிட் ஒன்றை பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் என்பது தெரிந்தது.

https://twitter.com/OviyaaSweetz/status/1394021164368814080?s=19
YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here