சத்யதேவ், தாலி தனஞ்செயா நடிக்கும் பான் இந்திய திரைப்படம் “ஜீப்ரா” !!!

இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் தாலி தனஞ்சயா இணைந்து இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் பான் இந்திய க்ரைம் ஆக்‌ஷன் எண்டர்டெயினர் திரைப்படத்தில் நடிக்கிறார்கள். இந்த இரு நடிகர்களின் 26வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. (ஜனவரி 26) குடியரசு தினமான இன்று தயாரிப்பாளர்கள் படத்தின் தலைப்பை அறிவித்தனர்.

ஜீப்ரா என்ற தலைப்பே ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது. தலைப்பு அறிவிப்பு போஸ்டரில் லோகோவுடன் ஒரு வேகமானி இணைக்கப்பட்டுள்ளது, அதில் நாம் செஸ் துண்டுகளைக் காணலாம். சதுரங்க ஆட்டத்தைப் போலவே படமும் திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கும். போஸ்டரில் உள்ள விஷயங்கள் முன்னணி கதாபாத்திரங்களின் புத்திசாலித்தனமான தன்மையைக் குறிக்கின்றன. போஸ்டரின் அத்தனை விசயங்களும் படைப்பின் மீதான ஆர்வத்தைத் தூண்டுகிறது.

Padmaja Films Private Ltd and Old Town Pictures, சார்பில் எஸ்.என்.ரெட்டி, பால சுந்தரம், தினேஷ் சுந்தரம் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் மற்றும் ஜெனிபர் பிசினாடோ கதாநாயகிகளாக நடிக்க, மூத்த நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சத்யா அகல, சுனில் ஆகியோர் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

50 நாட்கள் முதல் ஷெட்யூலை முடித்திருக்கும் படக்குழு, மீதமுள்ள படப்பிடிப்பை ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் மும்பை பகுதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. KGF, KGF2 போன்ற புகழ்பெற்ற படங்களின் இசையமைப்பாளர் திரு.ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அவரது முந்தைய படங்களைப் போல இப்படத்திற்கும் அவரது இசை மிகப்பெரும் பலமாக இருக்கும்.

இந்த பான் இந்திய திரைப்படம் தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நடிகர்கள்: சத்யதேவ், தாலி தனஞ்சயா, சத்யராஜ், பிரியா பவானி சங்கர், ஜெனிபர் பிசினாடோ, சத்யா அகல, சுனில் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு: எழுத்தாளர், இயக்குனர்: ஈஸ்வர் கார்த்திக் கூடுதல் திரைக்கதை: யுவா தயாரிப்பாளர்கள்: எஸ்.என்.ரெட்டி, பால சுந்தரம் மற்றும் தினேஷ் சுந்தரம்
தயாரிப்பு நிறுவனம் : Padmaja Films Private Ltd மற்றும் Old Town Pictures
இணை தயாரிப்பாளர்: சுமன் பிரசார் பாகே ஒளிப்பதிவு : சுமன் பிரசார் பேகே
இசை: ரவி பஸ்ரூர்
எடிட்டர்: அனில் கிரிஷ்
வசனங்கள்: மீராக்
சண்டைக்காட்சிகள்: சுப்பு
ஆடை வடிவமைப்பாளர்: அஸ்வினி முல்புரி, கங்காதர் பொம்மராஜு
மக்கள் தொடர்பு: சதீஷ்குமார், சிவா ( AIM )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here