பார்க்கிங் கதை
கதையின் நாயகன் ஈஸ்வர் ( ஹரிஷ் கல்யாண்) ஐடி கம்பெனியில் வேலை செய்துகொண்டிருக்கிறார். அவரின் மனைவி இந்துஜா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். அதனால் ஈஸ்வர் அவர் வேலை செய்யும் இடத்திற்கு அருகிலேயே வீடு பார்த்து குடி ஏறுகிறார். ஈஷ்வரும் அவரின் மனைவியும் முதல் மாடியில் இருக்கின்றனர். கீழ் வீட்டில் இளம் பரிதி ( MS. பாஸ்கர்) அவரின் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இளம்பரிதி ஒரு நேர்மையான அரசு அதிகாரியாக இருக்கிறார், இவர் சிக்கனம் கொண்டவர்.
ஈஷ்வர் குடும்பமும், இளம்பரிதி குடும்பமும் நல்ல பழக்கவழக்கத்தில் இருக்கின்றனர். ஈஸ்வர் அவரின் மனைவிக்காக ஒரு கார் வாங்குகிறார். அந்த காரை வீட்டு காம்பவுண்டுக்குள் விடும்போது, ஈஸ்வருக்கும் இளம்பரிதிக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால் இளம்பரிதி வீம்புக்காக கார் வாங்குகிறார். அதன் பிறகு அந்த காம்பவுண்டுக்குள் யார் காரை விடுவது என பிரச்சனை நிலவுகிறது. கடைசியில் இந்த பிரச்சனை எங்கு போய் முடிகிறது என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡️கதைக்களம்
➡️ஹரிஷ் கல்யாண் & MS.பாஸ்கர் சிறப்பான நடிப்பு
➡️கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த மற்ற அனைவரின் நடிப்பு
➡️இடைவேளை & கிளைமேக்ஸ் காட்சிகள்
➡️சாம்.CS பின்னணி இசை
➡️படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
➡️இரண்டாம் பாதியில் வரும் படத்தின் வேகத்தை குறைக்கும் ஒருசில காட்சிகள்
Rating: ( 3/5 )


























