போர் தமிழ் திரைப்பட விமர்சனம்

போர் கதை

பாண்டிச்சேரியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பிரபு மருத்துவ சம்மந்தமான படிப்பை படிக்கிறார். பல்கலைக்கழகத்தில் பிரபு சூப்பர் சீனியர் என்பதால், பல்கலைக்கழகத்தை ஆள்கிறார், இவர் நண்பர்கள், காதலி என மிக சந்தோஷமாக இருக்கிறார்.

Read Also: Athomugam Tamil Movie Review

பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவனாக சேரும் யுவராஜ். சீனியர்களுடன் சண்டையிடுகிறார், அப்போது நண்பர்களுக்காக பிரபு வருகிறார். பிரபு, யுவராஜ் இருவருக்கும் சிறுவயது முன்பகை இருக்கிறது. அதன் காரணமாக யுவராஜ், பிரபுவிடம் உன் நண்பர்கள், காதலி என அனைவரையும் உன்னிடமிருந்து பிரித்து, உனக்கும் அந்த வலியை கொடுத்து பழி வாங்குவேன் என்கிறார். அதன் பிறகு இவர்கள் இருவருக்குள் என்னென்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡நடிகர்கள் தேர்வு
➡அர்ஜுன் தாஸ் & காளிதாஸ் இருவரின் சிறப்பான நடிப்பு
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
➡வசனங்கள்
➡படம் எடுக்கப்பட்ட விதம்

படத்தில் கடுப்பானவை

➡மெல்ல நகரும் கதைக்களம்
➡கதைக்கு சம்மந்தம் இல்லாத ஒருசில காட்சிகள்
➡நம்மை படத்துடன் இணைக்காத கல்லூரி காட்சிகள்

Rating: ( 3/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *