ரத்தம் தமிழ் திரைப்பட விமர்சனம்

ரத்தம் கதை

வானம் என்கிற செய்தி சேனல் இருக்கிறது. அதனுடைய CEO – வான செழியனை அலுவலக வரவேற்பு இடத்திலேயே ஒருவன் கொலைசெய்கிறான். எதற்காகவென்றால் தன் தலைவனான தமிழ்ச்செல்வனை பற்றி தவறாக எழுதியதற்காக, இந்த கொலையை செய்கிறான். இந்த கொலைக்கு பின்னால் வேறொரு காரணம் இருக்குமோ என எண்ணிய செழியனின் தந்தை, தன் வளர்ப்பு மகனான ரஞ்சித் குமாரிடம் உதவி கேட்கிறார்.

Read Also: 800 Movie Review

ரஞ்சித் இதற்கு முன் புலனாய்வு பத்திரிகையாளராக இருந்தவர். இவர் இந்த வேலையால் பாதிக்கப்பட்டிருப்பார், அதனால் சற்று தயகத்தில் இருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் அதனை ஒத்துக்கொண்டு கொலைக்கு பின்னணி என்ன என்று தேட ஆரம்பிக்கிறார். ரஞ்சித் குமார் கடைசியில் கொலைக்கான பின்னணியை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதும், அதற்கிடையில் இவர் சந்தித்த பிரச்சனைகள் என்னென்ன என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் CS.அமுதன் அவரின் முந்தைய படங்களிலிருந்து சற்று மாறுபட்டு இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡வித்தியாசமான கதைக்கரு
➡விஜய் ஆண்டனி & மஹிமா-வின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡விறுவிறுப்பான முதல்பாதி

படத்தில் கடுப்பானவை

➡படத்திற்கு மேலும் வலுசேர்க்காத பின்னணி இசை
➡கணிக்குப்படியான இரண்டாம்பாதி கதைக்களம்

Rating: ( 2.75/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை800 தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரை’அயலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!