ரெண்டகம் கதை
கதையின் நாயகன் கிச்சு (போபன் ) தன் காதலி கல்யாணியுடன் ( ஈஷா ரெபா ) வெளிநாட்டில் சென்று செட்டில் ஆக முடிவு எடுக்கிறார் அதற்கு அவருக்கு பணம் தேவைப்படுகிறது அப்பொழுது அவருக்கு ஒரு வேலை வருகிறது, அது என்னவென்றால் டேவிட் ( அரவிந்த் சாமி ) உடன் நெருங்கி பழகி ஒரு சில தகவல்களை தெரிந்து கொண்டு சொன்னால் 25 லட்சம் தருவதாக இவருக்கு மேல் உள்ளவர்கள் சொல்கிறார்கள், டேவிட் இடம் இருக்கு தேவையான தகவல் என்னவென்றால் டேவிட் ஒரு ரவுடி குமபலில் அடியாளாக இருப்பார் அப்போது இவரிடம் 300 கோடி மதிப்புள்ள தங்கம் இருக்கும், அப்போது டேவிட்டுக்கு எதிர் பாரத விதமாக விபத்து ஏற்பட்டு அனைத்தையும் மறந்து விடுவார், கிச்சு இவருக்கு தேவையான தகவலை திரட்டிக்கொண்டு 25 லட்சம் பெற்று வெளிநாடு சென்றாரா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை
இதனை இயக்குனர் பெலினி மிகவும் வித்யாசமாகவும் சில ட்விஸ்டுகளுடனும் கூறியுள்ளார்
படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
திரைக்கதை
கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த அனைவரின் நடிப்பு
ஒளிப்பதிவு
பின்னணி இசை
படத்தில் கடுப்பானவை
லாஜிக் இல்லாத ஒருசில சண்டைக்காட்சி
Rating: ( 3.5 / 5 )


























