சத்திய சோதனை கதை
கதையின் ஆரம்பத்தில் 4 மர்மமான நபர்கள் ஒன்றுசேர்ந்து ஒரு பணக்காரரை முன் விரோதம் காரணமாக கொன்றுவிடுகின்றனர். அப்போது இறந்தவரின் உடம்பில் தங்க நகைகள் இருக்கிறது. மறுநாள் காலையில் கதையின் நாயகன் பிரேம்ஜி தன் காதலியை பார்க்க சென்றுகொண்டிருக்கிறார். அப்போது அங்கு இறந்துகிடப்பவரை பார்த்து அதிர்ச்சிக்குள்ளான பிரேம்ஜி அவரின் உடம்பில் இருக்கும் ஒரு செயின், ஒரு வாட்ச், ஒரு போன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு காவல் நிலையம் செல்கிறார்.
Read Also: Kolai Movie Review
காவல் நிலையத்தில் நடந்தை கூறுகிறார், அந்த பணக்காரரிடம் இருந்து எடுத்து வந்தவைகளையும் போலீசாரிடம் ஒப்படைக்கிறார், உதவி செய்யும் எண்ணத்தில் பேரம்ஜி செய்த செயலே அவருக்கு எதிராக திரும்பி விடுகிறது. போலீஸ் இறந்தவரை பற்றி கவலைப்படாமல், அவரின் உடம்பில் இருந்த மேலும் பல நகைகளை கேட்டு மிரட்டுகின்றனர். கடைசியில் பிரேம்ஜி அந்த பிரச்சனையிலிருந்து வெளியே வந்தாரா? இல்லையா? என்பதும் அந்த நகைகளை யார் எடுத்தார் என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் சுரேஷ் சங்கையா சற்று நகைசுவையாகவே இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
KG. மோகன் நடிப்பு
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
ஒளிப்பதிவு
பின்னணி இசை
ஒருசில வசனங்கள்
படத்தில் கடுப்பானவை
மெல்ல நகரும் முதல்பாதி கதைக்களம்
மேலும் மெழுகேற்றப்படாத திரைக்கதை
Rating: ( 2.5/5 )