செங்களம் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

செங்களம் கதை

சத்யமுர்த்தி என்பவரின் குடும்பம் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சேராமல், விருதுநகர் சேர்மனாக இருந்துகொண்டு அந்த ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்துவருகின்றனர்.அப்படி அந்த குடும்ப வழியில் தற்போது சேர்மனாக இருப்பவர்தான் ராஜமாணிக்கம், இவரை ஒரு கும்பல் கொலைசெய்துவிடுகிறது.

ராயர் மற்றும் அவரின் சகோதரர்கள் சேர்ந்து ஒருசில அரசியல்வாதிகளை கொலை செய்கின்றனர் அவர்கள் எதற்காக இந்த கொலைகளை செய்கின்றனர் என்பதும் ராஜமாணிக்கத்தை யார் கொலை செய்தார்கள் என்பதும், சேர்மேன் பதவியில் அடுத்து யார் விருதுநகரை ஆளப்போகிறார் என அடுத்தடுத்து பல திருப்பங்களை கொண்டத்துதான் இந்த செங்களம்.

இந்த கதையினை இயக்குனர் SR. பிரபாகரன் இயக்கியுள்ளார்.

9 எபிசோடுகளை கொண்ட இந்த செங்கலம் ZEE5 OTT தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

சிறப்பானவை
ஆழமான வசனம்
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
முக்கியமாக நாச்சி கதாபாத்திரத்தில் நடித்த ஷாலி-யின் நடிப்பு
தரனின் பின்னணி இசை
வெற்றியின் ஒளிப்பதிவு
SR.பிரபாகரனின் இயக்கம்

படத்தில் கடுப்பானவை
பெரிதாக எதுவும் இல்லை

Rating: ( 3.5/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here