சைரன் தமிழ் திரைப்பட விமர்சனம்

சைரன் கதை

14 வருடங்களாக, திலக் புழல் சிறையில் இருக்கிறார். இவரின் நன்னடத்தை காரணமாக 14 நாட்கள் பரோலில் வெளியே சென்று வர நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. ஆனால் திலக் அதனை மறுக்கிறார், காரணம் இவருக்கு மலர் என்று ஒரு மகள் இருக்கிறார், அவரின் முன் நிற்க மனதில் உள்ள குற்ற உணர்ச்சி காரணமாக மறுக்கிறார்.ஆனாலும் சில சூழ்நிலை காரணமாக திலக் பரோலில் வெளியே வருகிறார்.

காவல் துறையிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் பணியேற்கிறார் நந்தினி. திலக் நந்தினியின் கஸ்டடியில் வெளியே வருகிறார், அப்படி வெளியே வந்த பிறகு திலக் சம்மந்தமே இல்லாமல் சில பிரச்சனைகளில் மாட்டிக்கொள்கிறார். அதனால் திலக்குக்கும் நந்தினிக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. கடைசியில் திலக் இந்த பிரச்சனையிலிருந்து வெளியே வந்தாரா? இல்லையா? என்பதும், மகளுடன் இணைந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡ஜெயம்ரவியின் சிறப்பான நடிப்பு
➡அனைவரின் நடிப்பு
➡ஒருசில அரசியல் பேசும் வசனங்கள்
➡GV. பிரகாஷ் பாடல்கள்
➡சாம் CS பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு

படத்தில் கடுப்பானவை

➡படத்தின் நீளம்
➡மேலும் மெழுகேற்றப்படாத இரண்டாம்பாதி திரைக்கதை

Rating: ( 3/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஎப்போதும் ராஜா தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரை(Celebrity Cricket League) சிசிஎல் சென்னை ரைனோஸ் அணியினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!