ஜவான் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஜவான் கதை கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகன் ஷாருக்கான் அவரின் குழுவுடன் இணைந்து ஒரு ரயிலை கடத்துகிறார்கள். அப்படி கடத்திய பின் இவர்கள் அரசுக்கு ஒரு டிமாண்ட் வைக்கின்றனர். பிறகு இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த ஒருவரை நியமிக்கின்றனர். அடுத்து பேச்சுவார்த்தை நடத்த வருபர்தான் கதையின் நாயகி நயன்தாரா. அப்படி நயன்தாரா வந்து பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்த பிறகு, ஷாருக்கான் வைத்த டிமாண்ட் என்ன என்பதும், இவர்களெல்லாம் யார்?, எதற்காக இந்த ரயிலை கடத்தினார்கள், என்பதும் அப்படி இவர்கள்…

Read More

ஷாருக்கின் ஜவான் பட முதல் பாடல், 24 மணி நேரத்தில் 46 மில்லியன் பார்வைகளைப் பெற்று வரலாற்று சாதனை படைத்து உள்ளது!!

ஒரே படத்தின் மூன்று மொழி வீடியோக்களும் YouTube ல் முதல் 3 இடங்களில் ஆதிக்கம் செலுத்தி உலகளவில் சாதனை படைத்துள்ளது, உண்மையில் இது இந்திய அளவில் மிகப்பெரும் சாதனையாகும். ஜவான், முதல் பாடல் ஹிந்தியில் ‘ஜிந்தா பந்தா’, தமிழில் ‘வந்த எடம்’ மற்றும் தெலுங்கில் ‘தும்மே துலிபேலா’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது ஒரு மகத்தான மைல்கல்லை எட்டியுள்ளது. வெளியான 24 மணி நேரத்திற்குள், இந்த பாடல்கள் டிஜிட்டல் உலகத்தை புயல் போல் தாக்கியது, YouTube…

Read More

ஜவான் படத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நயன்தாராவின் போஸ்டரை வெளியிட்ட ஷாருக்கான்

ஷாருக்கான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘ஜவான்’, அதன் வளர்ந்து வரும் பிரபலத்துடன் தொடர்ந்து பார்வையாளர்களை வசீகரித்து வருகிறது. ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி: நயன்தாராவின் கடுமையான மற்றும் அதிரடியான அவதாரத்தைக் காண்பிக்கும் அட்டகாசமான புதிய போஸ்டர், தி ஃபிமேல் லீட், சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. “ஜவான்” முன்னோட்டத்தில் நயன்தாராவின் தோற்றம் அவரின் பாத்திரம் மீதுள்ள எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்தில் அதிகரித்துள்ளது. இந்த போஸ்டர் அதன் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஷாருக்கான்…

Read More

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் தென்னிந்திய பாக்ஸ் ஆபிஸில் ‘பதான்’ பட சாதனையை முறியடிக்கும்

சமீபத்தில் வெளியான ஷாருக்கானின் ஜவான் பட ப்ரிவ்யூ இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் சூப்பர்ஹிட்டாக மட்டுமல்லாமல் பல புதிய சாதனைகளைப் படைக்கும் என்பதைத் தெளிவாக நிரூபித்துள்ளது. அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் தேசம் முழுவதிலும் இருந்து முன்னணி நட்சத்திர நடிகர்கள் பங்கு பெற்றிருக்கும் இப்படம் தான், சந்தேகத்திற்கு இடமின்றி இப்போதைய ஹாட் டாபிக். ஆனால் இது வெறும் ஆரம்பம் தான். பதான் மூலம் ஷாருக்கான் இந்தியத் திரை சாதனைகளில் தன் பெயரைப் பொறித்துள்ளார், ஜவான் அதை இன்னும் ஒரு படி…

Read More

இணையத்தில் ட்ரெண்டிங்கான ஷாருக்கான் 31

‘பாலிவுட் பாட்ஷா’ ஷாருக்கான் இந்தி திரையுலகில் அறிமுகமாகி 31 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் அவர் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். இதில் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்தும், ‘ஜவான்’ பட அப்டேட் குறித்தும் சுவராசியமான பல விசயங்களை பகிர்ந்து கொண்டார். ஷாருக்கான் பரபரப்பான… பிரபலமான.. நட்சத்திர நடிகராக திகழ்ந்தாலும் மாதந்தோறும் #AskSRK என்ற பிரத்யேகமான நிகழ்வு மூலம் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களிடம் உரையாடுவது வழக்கம். இதன் போது அவர் வெளிப்படுத்தும்…

Read More

ஷாருக்கான் வெளியிட்ட ‘ஜவான்’ பட அப்டேட்

‘பார்வையாளர்களுக்கு நேர்த்தியும், தரமும் மிக்க படைப்பை வழங்க படக்குழுவினருக்கு பொறுமையும், அதற்கான கால அவகாசமும் தேவை’ என ‘ஜவான்’ பட வெளியீட்டின் தாமதம் குறித்து அப்பட நாயகனான ஷாருக்கான் தெரிவித்திருக்கிறார். ‘பதான்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு ஷாருக் கான் பல விருதுகளை வென்ற இயக்குநரான அட்லீ இயக்கத்தில் தயாராகும் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் ஷாருக்கான், பார்வையாளர்களை அதிரடியான பயணத்திற்கு அழைத்துச் செல்ல தயாராகிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ‘ஜவான்’ படம்…

Read More

தி நம்பி எஃபெக்ட் ஆஸ்கர் விருது 2023 பரிந்துரைப் பட்டியலில் நுழைந்திருக்கிறது

நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமான ‘ராக்கெட்ரி’ திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, ஆஸ்கர் விருது 2023 பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்ததன் மூலம் இந்தத் திரைப்படம் மீண்டும் தலைப்புச் செய்தியாகியுள்ளது. கடந்த 2022ம் வருடம் ஜூலை 1ம் தேதி வெளியாகி பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சவால் மிகுந்த உண்மை சம்பவங்களை இயக்குநர் மாதவன் படமாக்கி…

Read More