பயணிகள் கவனிக்கவும்

திரை விமர்சனம்

விக்ருதி படத்திலிருந்து பயணிகள் கவனிக்கவும்

மலையாளத்தில் 2019ம் ஆண்டு வெளியான விக்ருதி படத்தின் ரீமேக் தான் விதார்த் நடித்துள்ள பயணிகள் கவனிக்கவும் படம். கேரளாவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இப்படம், தமிழில் ஆஹா ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி உள்ளது. விதார்த், லட்சுமி, கருணாகரன் போன்றோர் முக்கிய கதாபபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

படத்தின் ஒன் லைன்

விதார்த் மற்றும் லட்சுமி காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத மாற்று திறனாளியாக உள்ளனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சாதாரண மிடில் கிளாஸ் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாய் வாழ்ந்து வருகின்றனர். மறுபுறம் துபாயில் இருந்து ஊருக்கு வரும் கருணாகரனுக்கு வீட்டில் பெண் பார்த்து கல்யாணம் பண்ண திட்டமிட்டு உள்ளனர். விதார்த் மெட்ரோ ரயிலில் தூங்குவதை கருணாகரன் குடிபோதையில் தூங்குகிறார் என்று தவறுதலாக போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்கில் பதிவிட அது வைரல் ஆகி விடுகிறது. இதனால் விதார்த் வாழ்க்கையில் என்ன ஆனது? கருணாகரனுக்கு கல்யாணம் நடைபெற்றதா என்பது தான் பயணிகள் கவனிக்கவும் படத்தின் ஒன் லைன்.

கதாபாத்திரங்களும் செயல்பாடுகளும்

மாற்று திறனாளியாக மிகவும் கடினமான ஒரு கதாபாத்திரத்தை எடுத்து நடித்ததற்கு விதார்த்திற்கு தனி பாராட்டுகள். வாய் பேச முடியாமல் செய்கையால் ஒவ்வொரு விசயத்தையும் கூறும் விதத்தில் அசத்துகிறார். முக்கியமான எமோஷனல் காட்சிகளில் சிறப்பாகவே நடித்துள்ளார். தமிழ் சினிமா இது போன்ற நல்ல நடிகர்களை சரியான கதாபாத்திரங்களில் பயன்படுத்தி கொள்ளலாம். லஷ்மி ப்ரியாவும் விதார்த்தின் மனைவியாக வாய் பேசமுடியாத கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார். வண்டியில் போவது தொடங்கி, சாப்பாடு சாப்பிடும் வரை அனைத்தையும் போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்கில் பதிவு செய்து லைக்ஸ்காக ஏங்கும் இன்றைய சமூகத்தில் உள்ள பலரது முகத்தை ஒற்றை உருவமாக பிரபாகரன் வருகிறார். அவரது எதார்த்தமான நடிப்பு ரசிக்க வைக்கிறது.

இன்றைய சமூகத்திற்கு ஏற்ற படம்

பயணிகள் கவனிக்கவும் படத்தை நாம் அனைவரும் நிச்சயம் கவனிக்க வேண்டும், காரணம் இன்றைய சமூகத்தில் நாம் அனைவரும் எதைப்பற்றியும், யாரைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் அடுத்தவர்களின் ஒப்புதல் இல்லாமல் அவர்களை வீடியோ அல்லது புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு லைக்ஸ்கள் வாங்குகிறோம் ஆனால்… நாம் அப்படி செய்வதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை பற்றி ஒருபோதும் சிந்தித்தது கிடையாது, இனியாவது நாம் சிந்திக்க வேண்டும் என்பதை இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி முடிவு செய்து இந்த படத்தை இயக்கி உள்ளார். பயணிகள் கவனிக்கவும் படம் தனி கவனத்தை பெறுகிறது. இந்த படம் இன்று ஆஹா தமிழில் வெளியாகி உள்ளது.

படத்தில் சிறப்பானவை

1.விதாரத்தின் எதார்த்த நடிப்பு

2.லட்சுமி பிரியா மற்றும் கருணாகரனின் தனித்துவ நடிப்பு

3.திறமையான திரைக்கதை

படத்தில் கடுப்பானவை

1.சற்று மெல்ல நகரும் கதைக்களம்

Rating; [3.5 /5]

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here