திருச்சிற்றம்பலம் தமிழ் திரைப்பட விமர்சனம்

திருச்சிற்றம்பலம் – கதை
கதையின் நாயகன் ( தனுஷ் ) திருச்சிற்றம்பலம் டெலிவரி பாயாக வேலை செய்கிறார் , இவருக்கு கோவக்கார அப்பா ( பிரகாஷ் ராஜ் ), பாசக்கார தாத்தா (பாரதிராஜா ) மற்றும் இணைபிரியா தோழி ( நித்யா மேனன் ) என சில சொந்தங்கள் இருக்கின்றன, இவர் டெலிவரி செய்யும்போது ஒரு நாள் இவருடன் பள்ளியில் படித்த( ராஷி கண்ணா ) பெண்ணை பார்க்கிறார், அவரை பார்த்த பிறகு இவரின் சிறுவயது காதல் நினைவுகள் நியாபகம் வருகிறது பிறகு ராஷிகண்ணாவுடன் மீண்டும் பழகுகிறார், அப்போது தனது காதலை சொல்கிறார் ஆனால் ராஷிகண்ணா இவரை நிராகரிக்கிறார், அப்போது பிரகாஷ் ராஜிற்கு ஒரு பிரச்னை வருகிறது, அந்த சமயத்தில் பழம் அவரின் குடும்பத்துடன் ஊருக்கு செல்கிறார் அப்போது ஒரு பெண்ணை(பிரியா பவானி ஷங்கர் ) பார்க்கிறார் அவர் மீது ஒரு ஈர்ப்பு வருகிறது , எந்த ஒரு பிரச்சனைக்கும் போகாமல் எப்போதுமே தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் பழம் அப்பாவிற்காக அந்த பிரச்சனையை இவர் எதிர்கொள்கிறாரா ? இல்லையா ? மற்றும் இவர் கடைசில் யாரை காதலிக்கிறார் என்பது தான் மீதி கதை…

இதனை இயக்குனர் மித்ரன் ஜவஹர் தற்போது உள்ள சில இளைஞகர்களின் சூழலை நாம் புரிந்துகொள்ளும்படி தத்ரூபமாக நமக்கு தந்துள்ளார்

படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
தனுஷ் & நித்யா மேனனின் எதார்த்த நடிப்பு
கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த அனைவரின் நடிப்பு
அனிருத்தின் அட்டகாசமான இசை
ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை
கடுப்பாகும் அளவிற்கு பெரிதாக ஒன்றும் இல்லை

Rating: ( 3.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *