பட்டையை கிளப்பும் ஸ்டண்ட் – வலிமை அப்டேட் குடுத்த வில்லன் !!

தல அஜித் நடித்துவரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. இருப்பினும் ’வலிமை’ என்று படத்தின் டைட்டில் வெளியான பிறகு இந்த படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் வெளி வரவில்லை என்பதும் கடந்த பல மாதங்களாக அஜித் ரசிகர்கள் அப்டேட்டுக்களை கேட்டு வந்தும், படக்குழுவினர் தரப்பில் இருந்து எந்த வித அப்டேட்டும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ’வலிமை’ படம் குறித்த செய்திகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜித்தின் ’வலிமை’ படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்றை பிரபல நடிகர் ஆர்கே சுரேஷ் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறிய போது ’வலிமை’ படத்தில் அஜித் சில அவுட் ஸ்டாண்டிங் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து உள்ளதாகவும், ’வலிமை’ படம் அவரது கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ’வலிமை’ படம் ரசிகர்களை மீண்டும் ரசிகர்களை திரையரங்குகளுக்கு கொண்டுவரும் ஒரு படமாக இருக்கும் எனவும் கூறியுள்ளதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிரபல நடிகர், தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதும், இவர் அஜித் ரசிகராகவே ’பில்லா பாண்டி’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *