திரையுலகிற்குப் பாடகர்களை கொடையளிக்கும் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி !!

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்குபவர்கள், கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி வருகின்றனர்.

விஜய் டீவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக கலந்துகொள்ளும், இசையமைப்பாளர்கள் பலருக்குப் பாட்டு வாய்ப்பளித்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் ஏழ்மை நிலையில் இருக்கும் திறமையாளர்கள் பலர் இந்நிகழ்ச்சி மூலம் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். நெகிழ்ச்சியான பற்பல அற்புத தருணங்கள் இந்நிகழ்ச்சியில் அரங்கேறியுள்ளது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் எனப் பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது. இந்த பிரிவுகளிலிருந்தும் பல திறமையான பாடகர்கள் திரைத்துறையில் பிரபல பாடகர்களால் பல பாடல்கள் பாடி வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம், 30 க்குமேற்பட்ட பாடகர்கள் 13க்கும் மேற்பட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில், 250க்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளனர். இசைத்துறைக்கு மிகப்பெரும் பங்களிப்பதோடு, பல திறமையாளர்களுக்கு ஏற்றம் தரும் நிகழ்ச்சியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உள்ளது.

ஜூனியரில் பூவையார், நித்யஶ்ரீ, ஹரிப்பிரியா, பிரியங்கா, பிரகதி குரு பிரசாத் என பல திறமையாளர்கள் திரைத்துறையில் முன்னணி பாடகர்களாக வலம் வருகின்றனர்.

சீனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமான பாடகர்கள் பூஜா வைத்தியநாத், சத்திய பிரகாஷ், திவாகர், செந்தில் கணேஷ், ரக்‌ஷிதா சுரேஷ், பூவையார், ஷாம் விஷால், சிவாங்கி, யோகி சேகர், ஆதித்யா RK தென்னிந்தியத் திரைத்துறையில் மிகச்சிறந்த முன்னணி பாடகர்களாகக் கோலோச்சி வருகின்றனர்.

மேலும் இசையமைப்பாளர் நடத்தும் வேர்ஃல்ட் டூர், வெளிநாட்டு இசை கச்சேரி, உள்நாட்டு இசைக்கச்சேரி என, பல இசை நிகழ்ச்சிகளிலும் பாடகர்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர்களே பங்கு பெற்று வருகிறார்கள்.

திறமையாளர்களை வெளிச்சமிட்டுக் காட்டுவதுடன், அவர்களுக்கு வப்புகளைக் குவித்துத் தரும், புகலிடமாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி விளங்குகிறது.

தற்போது சிறுவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 9 நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியிலும் பல நெகிழ்வான தருணங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த வாரம் நிகழ்ந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட சிறுவன் கலர்வெடி கோகுல், தனது அண்ணன் சரவெடி சரவணன் எழுதிய கானா பாடலை, கொண்டாட்டத்துடன் பாடி அனைவரையும் பிரமிக்க வைத்தார்.

எளிமையான குடும்பத்தில் பிறந்து, குடும்ப பாரத்தை தன்மேல் சுமந்துகொண்டு, கானாவில் எதிர்காலத்தைக் கனவு காணும் கலர்வெடி கோகுலுக்கு, அவரின் வாழ்க்கையை மாற்றும் பெரும் ஆசீர்வாதத்தைத் தந்தார் இசையமைப்பாளர் தமன். இந்நிகழ்ச்சியின் போது, வரும் தீபாவளிக்குள், ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தின் படத்தில், அவர் அண்ணண் பாடல் எழுதவும், கலர்வெடி கோகுல் பாடவும் வாய்ப்பளிப்பதாக உறுதியளித்தார் இசையமைப்பாளர் தமன்.

ஒரு போட்டி நிழச்சியாக மட்டுமல்லாமல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, திறமையால் ஒளிரும் பலருக்கு மாற்றம் தந்து வருகிறது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here