வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலிலும் உங்க டான்ஸும் உங்கள விட்டு போகல.. சமீபத்தில் அல வைகுந்தபுரமுலோ படத்தின் பாடல்கள் உலகம் முழுக்க உள்ள தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு நல்ல விருந்தாகவே அமைந்தது. சாமஜவரகமனா, ராமுலோ ராமுலா, OMG டாடி மற்றும் புட்ட பொம்மா பாடல்கள் வைரல் ஹிட்டாக அமைந்தது. குறிப்பாக ‘புட்ட பொம்மா’ பாடல் பட்டி தொட்டியெங்கும் உள்ள ரசிகர்களை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல் ஆடவைத்தது.
அந்த புட்ட பொம்மா பாடல் உள்ளூர் முதல் வெளிநாடு வரை பெரிய அளவில் பிரபலமானது. அண்மையில் இந்த பாடலுக்கு ஆஸ்திரேலியாவின் பிரபல அதிரடி கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மற்றும் அவரது மனைவி இந்த பாடலுக்கு டிக் டாக்கில் நடனமாடியது குறிப்பிடத்தக்கது.
பல நடிகர் நடிகைகள் இந்த பாடலுக்கு தங்களது டிக் டாக் தளத்தில் நடனமாடி வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகை சிம்ரன் தற்போது இந்த பாடலுக்கு தனது டிக் டாக் கணக்கில் நடனமாடியுள்ளார் அதை தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

































