அதர்வா முரளியின்உருக்கமான பிறந்தநாள் வாழ்த்துக்கு!!

முரளி மே 19, 1964 ஆம் ஆண்டு பிறந்தார் !! கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் 1984 இல் வெளியான   பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். பின் 1990 இல் வந்த “புது வசந்தம்”, 1991 இல் வந்த “இதயம்” படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. “கடல் பூக்கள்” என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதையும் பெற்றார். ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நாயகன் என்று சொன்னாலும் மிகையாகாது. இன்னும் உயரம் செல்லும் நேரத்தில் தன் 46 வது வயதில் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் மாரடைப்பால் மரணமடைந்தார்.

அதன் பின் முரளி அவர்களின் மகன் அதர்வா முரளி 2010இல் பானா காத்தாடி படம் மூலம் அறிமுகமானார். முதல் படமே ஹிட் !! அப்பாவின் அனுகிரகம் மகனிற்கும் அப்படியே இருந்தது. தற்போது என்று முரளி பிறந்தநாள், அதனை தொடர்ந்து அதர்வா தன் ட்விட்டர்,  இன்ஸ்டாகிராம் பக்கங்களில்  முரளி அவர்கள் புகைப்படத்தை பதிவிட்டு ஒரு உருக்கமான பதிவை எழுதியுள்ளார் அதில் ‘ உங்களை போல் மிகவும் நிதானமான, நம்பிக்கையான மனிதரை என் வாழ்நாளில் கண்டதில்லை. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா !! நாங்கள் உங்களை விரும்புகிறோம் மற்றும் அனுதினமும் உங்கள் இழப்பை நினைத்து வருந்துகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here