ஓ மணப்பெண்ணே திரை விமர்சனம்

நடிகர்  : ஹரீஷ் கல்யாண் 

நடிகை  : பிரியா பவனி சங்கர்

இயக்குனர்  : கார்த்திக் சுந்தர் 

இசை : விஷால் சந்திராசேகர்

கதை

விஜய் தேவரகொண்டா, ரித்து வர்மா நடித்த பெல்லி சூப்புலு படத்தை அழகாக ரீமேக் செய்திருக்கிறார் கார்த்திக் சுந்தர்.

ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானிசங்கர் இடையேயான கெமிஸ்ட்ரி படத்திற்கு பெரிய பலம்.

வாழ்க்கையை ஜாலியாக வாழும் கார்த்திக்(ஹரிஷ் கல்யாண்) தன் குடும்பத்தார், நண்பர்களுடன் பெண் பார்க்க செல்கிறார். ஸ்ருதியும்(ப்ரியா பவானிசங்கர்), கார்த்திக்கும் ஒரு அறைக்கு சென்று பேச, தாழ்ப்பாள் பிரச்சனையாகி உள்ளே சிக்கிக் கொள்கிறார்கள்.

கதவை சரி செய்யும் வரை இருவரும் அவரவர் வாழ்க்கை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

என்ஜினியரிங் படித்த கார்த்திக் தனக்கு வரதட்சணை கிடைக்கும் என்பதால் பெண் பார்க்க வந்ததாக கூறுகிறார். எம்.பி.ஏ., அதுவும் கோல்டு மெடல் வாங்கிய ஸ்ருதிக்கு ஆஸ்திரேலியாவுக்கு சென்று மேல்படிப்பு படிக்க ஆசை. இப்படி பேசிக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு இடையே ஏதோ ஈர்ப்பு ஏற்பட அந்த நேரத்தில் தான் வீடு மாறி வந்தது தெரிகிறது. ஆனால் விதி அவர்களை மீண்டும் சந்திக்க வைக்கிறது.

ஸ்ருதி துவங்கும் உணவக பிசினஸில் பார்ட்னர் மற்றும் சமையல்காரராக சேர்கிறார் கார்த்திக். நிஜத்திலும் நல்ல பார்ட்னர்கள் என்பதை அவர்கள் எப்பொழுது உணர்வார்கள்?

பெல்லி சூப்புலு படத்தை பார்த்திருந்தாலும் ஓ மணப்பெண்ணே படத்தை பார்க்கும் போது புது ஃபீலிங் கிடைக்கிறது. பெல்லி சூப்புலு காட்சிகளை எடுத்து தன் ஸ்டைலில் காட்டியிருக்கிறார் கார்த்திக் சுந்தர்.

கார்த்திக்கின் தந்தையாக வேணு அரவிந்த் சிறப்பாக நடித்திருக்கிறார்.

கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு, விஷால் சந்திரசேகரின் இசை அருமை.

மொத்தத்துல ஓ மணப்பெண்ணே ஒரு நல்ல காதல் திரைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *