பிரமாண்டமாக உருவாகி வரும் படம் “அமீரா”

தம்பி திரைக்களம் நிறுவனம் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் “அமீரா”. செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா “அமீரா” என்கிற டைட்டில் கேரக்டரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு கூத்துப்பட்டறை ஜெயகுமார் வினோதினி மற்றும் பலர் இதில் நடித்து வருகின்றனர். சீமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரா.சுப்ரமணியன் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

பல சர்வதேச விருதுகளைக் குவித்த டூலெட் படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.அமீரா என்றால் இளவரசி என அர்த்தம். இஸ்லாமியப் பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளைப் பற்றிய கதை இது என்பதால் அமீரா என பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவது என திட்டமிட்டிருந்த படக்குழுவினர் அதற்கு சில நாட்கள் முன்னதாகவே படப்பிடிப்பை முடித்து விடுவார்கள் என்று தயாரிப்பாளர் பெருமையுடன் கூறுகிறார்.அதற்கு காரணம் படத்தின் கதாநாயகி அனு சித்தாரா தான்..

மலையாளத்தில் மம்முட்டியுடன் இரண்டு, திலீப்புடன் ஒன்று என வெற்றிப்படங்களில் நடித்து அங்கு பரபரப்பான நாயகியாகியுள்ளார். மலையாளத்தில் சிங்கிள் டேக் நடிகை எனப் பெயர் வாங்கியவர். தமிழிலும் அதேபோல ஒவ்வொரு காட்சியையும் நன்றாக உள்வாங்கி கூடுமானவரை ஒரே டேக்கில் நடித்து அசத்துகிறாராம். மொழி தெரியாதவர் என்பதால் திட்டமிட்டதை விட கூடுதல் நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்குமோ என நினைத்த தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் வயிற்றில் தனது இயல்பான மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் நடிப்பால் பால் வார்த்திருக்கிறார் அனு சித்தாரா. இயக்குநர் சுப்ரமணியன் அணுசித்தாராவின் “கண்கள் நடிக்கும் நடிப்பிலேயே ஒரு படத்தை முடித்துவிடலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

Ameera Movie Actress Anu Sithara Photos

இந்தப்படத்தில் சீமான் மற்றும் ஆர்.கே.சுரேஷ் இருவரும் கிட்டத்தட்ட 20 நாட்கள் நடித்து தங்களது காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டனர். இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பும் கிளைமாக்ஸும் படமாக்கப்பட வேண்டியதுதான் பாக்கி. இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட்டால் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என்கிறார் தம்பி திரைக்களத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான வெற்றிக்குமரன். படம் தென்காசி, சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வேகமாக வளர்ந்து வருகிறது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here