பிக் பாஸ் பிரபலம் இவளோ நெருக்கமானவங்களா விக்னேஷ் சிவனுக்கு !!

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா என்பதும் இவருக்கு ஆரம்பத்தில் ரசிகர்களின் வரவேற்பு நல்லபடியாக இருந்தாலும் திடீரென ஆரியை பகைத்து கொண்டதால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக ஆரியின் வளர்ப்பு சரியில்லை என்றும் கலீஜ் என்றும் அவர் கூறிய வார்த்தைகள் ரசிகர்களை கோபப்படுத்தியதால் அடுத்த வாரமே அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சம்யுக்தா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் ஒருசில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில்…

Read More

இயக்குனர் ராஜீ முருகன் சகோதரர் உயிரிழந்தார் – தொடரும் சோகம் !!

’குக்கூ’ என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமான பிரபல பத்திரிகையாளர் ராஜுமுருகன் அதன்பின் ’ஜோக்கர்’ மற்றும் ’ஜிப்ஸி’ ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இவருடைய சகோதரர் நடிகர் மற்றும் பத்திரிக்கையாளரான குமரகுருபரன் இன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் மற்றும் ஊடகவியலாளரான குமரகுருபரன் ஒரு சில திரைப்படங்களில் நடித்தது மட்டுமின்றி புதிய தலைமுறை, நியூஸ் 18 உள்ளிட்ட ஊடகங்களில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென கொரோனாவால் பாதிக்கப்பட்ட…

Read More

“பார்க்க தான் பால்” ஆனா பக்கா மாஸ் – த்ரில்லரில் கலக்கும் தமன்னா !!

தமன்னா, ஜிஎம் குமார், பசுபதி, விவேக் பிரசன்னா, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்த இந்தத் தொடரை ராமசுப்பிரமணியம் என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடரின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த தொடரில் அனுராதா என்ற ஹேக்கர் கேரக்டரில் தமன்னா நடித்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. த்ரில் கதையம்சம் கொண்ட இந்த தொடர் ரசிகர்களின்…

Read More

பட்டையை கிளப்பும் ஸ்டண்ட் – வலிமை அப்டேட் குடுத்த வில்லன் !!

தல அஜித் நடித்துவரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. இருப்பினும் ’வலிமை’ என்று படத்தின் டைட்டில் வெளியான பிறகு இந்த படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் வெளி வரவில்லை என்பதும் கடந்த பல மாதங்களாக அஜித் ரசிகர்கள் அப்டேட்டுக்களை கேட்டு வந்தும், படக்குழுவினர் தரப்பில் இருந்து எந்த வித அப்டேட்டும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ’வலிமை’ படம் குறித்த செய்திகள் அவ்வப்போது…

Read More

ரைசாவுக்கு மீண்டும் பழைய முகம் திரும்பியது !!

சமீபத்தில் அழகுகளை மருத்துவர் பைரவியின் தவறான சிகிச்சை காரணமாக தனது முகம் வீங்கி விட்டதாகவும் அதற்காக ஒரு கோடி ரூபாய் மருத்துவர் தனக்கு நஷ்ட ஈடு அவர் கொடுக்க வேண்டும் என்றும் நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ரைசா வில்சன் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு பதில் நோட்டீஸ் அனுப்பி இருந்த மருத்துவர் பைரவி ரைசாவுக்கு வந்திருப்பது மிகவும் அரிதாக வந்திருக்கும் அலர்ஜி என்றும் இது தானாகவே சரியாகி விடும் என்றும் கூறியிருந்தார். மேலும் தனக்கு எதிராக…

Read More

ஜோடியாக தடுப்பூசி போட்டு கொண்ட நயன்தாரா விக்னேஷ் !!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக அனைத்து மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு மத்திய மாநில அரசுகளால் ஏற்படுத்தி வருகிறது. மேலும் திரையுலக பிரபலங்கள் பலரும் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்வதால் அவர்களது ரசிகர்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ்…

Read More

தீ பேமிலி மேன் 2 விரைவில் – சமந்தா ரசிகர்கள் உற்சாகம் !!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்போது தமிழில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும்’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்திலும், தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் தற்போது ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதும் விரைவில் இந்த படங்களின் படப்பிடிப்பு தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பாலிவுட்டில் தயாராகிவரும் ’தி ஃபேமிலி மேன் 2’ என்ற வெப்தொடரில் சமந்தா நடித்து…

Read More

என்னையும் கைது செய்யுங்க – அலறவிடும் ஓவியா !!

என்னையும் கைது செய்யுங்கள் என நடிகை ஓவியா தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக இந்தியாவுக்கு பயன்படுத்தவேண்டிய தடுப்பூசியை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தது ஏன்? என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த போஸ்டர்கள் ஒட்டியவர்களை காவல்துறை கைது செய்து வருகிறது இதனை அடுத்து ஆவேசமடைந்த காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி அவர்கள் ’என்னையும் கைது…

Read More

மனித நேயத்தின் உச்சம் – பாலா வாழ்த்து !!

சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வராக பதவியேற்றார். இதனையடுத்து ஒட்டு மொத்த திரையுலகினர்களும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நேரிலும் தொலைபேசியிலும் சமூக வலைதளங்கள் மூலமும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பிரபல இயக்குநரும் தேசிய விருது பெற்றவருமான பாலா அவர்கள் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு தனது வாழ்த்துச் செய்தியை…

Read More

சார்பட்டா பரம்பரை படம் குறித்து காளி வெங்கட் குடுத்த அப்டேட் !!

தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான காளி வெங்கட் தனது டுவிட்டர் பக்கத்தில் நிறைவு, ஆழமான, தரமான, நுணுக்கமான, வேலை செய்த மகிழ்ச்சி, நன்றி இயக்குனர் பா ரஞ்சித் என தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’சார்பாட்டா பரம்பரை’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததை அடுத்து தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது…

Read More