5 Reasons to watch Silence

Amazon Prime Video-வில் தற்போது ஸ்ட்ரீம் ஆகிக்கொண்டிருக்கிறது ஹேமந்த் மதுக்கர்ரின் Silence. தமிழ் மலையாளம் தெலுங்கு என்று மூன்று மொழிகளில் படம் வெளியாகியுள்ளது. சரி கதைக்குள் போகலாம். அமெரிக்காவில் நாற்பது வருடங்களாக பூட்டி இருக்கும் சொகுசு பங்களா பேய் வீடாக பார்க்கப்பட்டு வருகிறது. அதில் மாதவன், அனுஷ்காவும் பொழுதுபோக்க செல்கின்றனர். பங்காளவிற்குள் மாதவன் மர்மமான முறையில் கொலை செய்ய படுகிறார். அனுஷ்கா சில காயங்களுடன் பங்களாவை விட்டு வெளிய ஓடி வருகிறார். பின் காவல் நிலையத்தை அணுகுகிறார். காவல் துறையினர் மாதவன் இறப்பு எப்படி நிகழ்ந்தது என்று இன்வெஸ்டிகேஷன் துவங்குகின்றனர். ஆய்வில் பல திடுக்கிடும் உண்மைகளும் பல திருப்பங்களையும் சதம்மில்லாமல் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் படக்குழுவினர்.

சாக்ஷியாக அனுஷ்கா
கிட்டத்ததை பதிமூன்று வருடங்கள் கழித்து மாதவனுடன் இணைந்து நடிக்கிறார் அனுஷ்கா. அனுஷ்கா அழகின் உச்சம். காதுகேட்காமல் வாய் பேசமுடியாமல் அழகாக நடித்துள்ளார். Frame-களை அழகாக்கும் மந்திரக்காரி அனுஷ்கா. கதையயை இறுகப்பிடித்து கொண்டு படம் பார்க்கும் ரசிகர்களையும் அவரோடு பயணிக்க வைத்தது சிறப்பு.

மாதவன் என்னும் வெள்ளோந்தி
வயது வெறும் எண்கள் தான் என்று காட்டியுள்ளார் Maddy. மாநிறத்திற்கு அடுத்த வெள்ளை, அஞ்சரையடி உயரத்தில், அழகான நரைமுடிகளுடன் ஒரு இசை கலைஞனாய் படத்தில் அவதாரம் எடுக்கிறார் Maddy. “மாதவனுக்கு ஏற்பட்ட துரோகம் படத்தின் கதை”.மாதவன் தனக்கு குடுத்த வேலையை கனகச்சிதமாக செய்துள்ளார்.

புலனாய்வு அதிகாரியாக அஞ்சலி
புலனாய்வு அதிகாரியாய் அஞ்சலி. அஞ்சலி புலனாய்வுக்கு பொரு(ந்)த்தமில்லை. மிடுக்கான மேனி, எடுப்பாக தூக்கி நிற்கும் பின்னழகு, குளிங்க கண்ணாடி, வெள்ளை தேகம், அஞ்சலியை கட்டும் காட்சிகள் எல்லாம் buildups மற்றும் அழகில் கவனம் செலுத்தியுள்ளனர். ஒரு மாடல் ஆகா நடித்துஇருந்தால் பொருந்தியிருக்குமோ? இதை விட ஜீரணிக்க முடியாத ஒரு விஷயம் புலனாய்வு பிரிவில் கேப்டனுக்கு அடுத்து இருக்கும் அஞ்சலிக்கு ரத்தத்தை பார்த்தால் வாந்தி வந்துவிடுகிறது. அமெரிக்கா புலனாய்வு பிரிவு அதிகாரிகளே இப்படின்னா, இந்தியா புலனாய்வு பிரிவு சாட்சி இல்லாமல் தோற்றது சாதாரணம் தானே ?

ஆகமொத்தம்
காதல் காதலர்களை மட்டுமல்ல கொலைகாரர்களையும் உருவாக்குகிறது. எவ்வரிக்கு உருவம் கொடுக்க போய் நிகழ்ந்த படமே இந்த Silence. படத்தை அதிகமாக மக்களுக்கு புரியவைக்க முயற்சித்து மக்களை போர் அடிக்க வைத்துவிட்டனர். கிளை கதைகள் அதிகம். படம் ஓடும் நேரம் அதிகம். தேவையற்ற இடங்களில் பாடல்கள். த்ரில்லரை தேடி கண்டுபிடித்து கொள்ளவேண்டும். ஆகமொத்தம் தலைவன் சின் சான் சொன்னபடி “அமைதியோ அமைதி அமைதிக்கெல்லாம் அமைதி”

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here