சாதியற்ற சமூகம் சூளுரைக்கும் சூரரை போற்று !!

சமூகத்தில் சாதி ஒலிக்கப்படவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களால் மட்டுமே பிற மக்களையும் அவர்களுடைய உணர்வுகளையும் புரிந்து கொள்ளமுடியும். அந்த உணர்வுக்காக போராடுபவன் தலைவனும் ஆகிறான். சூரரை போற்று படத்தில் நெடுமாறன் ராஜாங்கம் ஒரு நல்ல தலைவன். மதுரை மாவட்டம் சோழவந்தான் கிராமத்தில் வாத்தியாருக்கு மகனாக பிறந்து வானுர்தி நிறுவனத்திற்கு சொந்தக்காரன் ஆகும் நெடுமாறனின் கதையே இந்த சூரரை போற்று.

சுதா கோங்கரா என்னும் படைப்பாளி
இயக்குனர்கள் பிற ஆளுமைகளுடைய சுய சரிதையை எடுப்பது வழக்கம். அதில் மானே தேனேவும் சேர்த்துகொள்ளவர்கள். தேன் அதிகமாக சேர்த்து திகட்டிய படங்களையும் நாம் கண்டுள்ளோம். இந்த படம் சரியான வரைகோட்டில் அமைந்துள்ளது. கதைக்கு தேவையான காட்சிப்படுத்துதல். நெடுமாறன் உணர்வுகள் அனைத்தையும் அப்டியே திரையில் கடத்தியுள்ளார் சுதா. மெய்ப்பாளன் சிறந்தவனெழில் குதிரை பந்தயம் அடிப்பது உறுதி என்ற கூற்றுக்கு சூரரை போற்று உதாரணம். நல்ல மெய்ப்பாளியான சுதாவிற்கு வாழ்த்துக்கள். சுதாவிற்கு இன்னும் பலமேடைகள் காத்துள்ளது.

GR கோபிநாதன் என்னும் நெடுமாறன் ராஜாங்கத்தின்
குக்கிராமத்தில் பிறந்து வானுர்தி அதிபர். இந்த ஒரு வரி கேட்கும் போதே சிலிர்க்கிறது. அதை எடுத்து உணர்ந்து, வாழ்ந்து காட்டியுள்ளார் மகா நடிகன் சூர்யா. இவ்வளவு இயல்பாக ஒரு மனிதன் நடிக்கமுடியுமா என்ற ஆச்சரியத்தை ஒவ்வொரு காட்சியிலும் நம்மால் காண முடியும். நிதானமாக கவனித்து நடிப்பது ஒரு ரகம், இதில் சூர்யா சுயநிதானம் இல்லாமல் நெடுமாறன் நிதானத்தில் நடித்திருப்பது பார்க்கும் பார்வையாளர்களை சிலிர்க்கவைக்கிறது. பின் அபர்ணா பாலமுரளி. மலையாள சுந்தர குட்டி என்று கூட சொல்லலாம். படத்திலும் அவர் பெயர் சுந்தரி. இயல்பின் உச்சக்கட்டம் அபர்ணா, மதுரை மக்கள் கொஞ்சும் குழந்தையாக மாறிப்போனால் .ஊர்வசி அம்மா கலைஞனுக்கு வயசில்லை என்பதை உணர்த்தியுள்ளார். கருணாஸ், காளிவெங்கட் தேவைப்பட்ட இடங்களில் நடிப்பின் அரக்கர்களாக மாறுகிறார்கள்.

இசையின் வெளிப்பாடு GV பிரகா(ஷ்) சம்
ஒரு படத்திற்க்கு கதை நடிகர் போல இசையும் முக்கியம். அருமையான இசை. பாடல் வரிகள் பேசும் சாதி ஒழிப்பு பிரமாதம். மண்ணுறண்ட மேல மனுஷன் ஆட்டம் பாரு, வெய்யோன் சில்லி அருமை. சூர்யாவின் அழுகைக்கும், வெறித்தனத்திற்கும் வலுசேர்க்கிறது GV பிரகாஷின் பின்னணி இசை.ஒரு கட்டத்தில் இசையும் சூரரை போற்ற வைக்கிறது.

ஏன் இந்த படத்தை பார்க்கவேண்டும் ?
ஏன் பார்க்கக்கூடாது? வாழ்க்கையில் போராட துணிந்தவனுக்கும், ஜெயிக்க துணிந்தவனுக்மான படம். முடியும் என்பதை மூலதனம் ஆக்கு,முடியாது என்பதை முட்டை கட்டு என்ற கூற்றை நெற்றி பொட்டில் அடித்தாற்போல் பேசுகிறான் இந்த சூரன். இந்த சுரணை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்ற கருத்தை நவீன்- நான் என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள். மேலும் சினிமா பற்றிய விமர்சனங்களுக்கு தமிழ் படத்துடன் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *