கான் சிட்டி தமிழ் திரைப்பட விமர்சனம்

கான் சிட்டி (2026) – முன்னோட்டம்

புதுமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில், ஷான் ரோல்டனின் இசையில் வெளியாகியுள்ள ஒரு க்ரைம்-காமெடி மற்றும் ஃபேமிலி டிராமா (Crime-Comedy Family Drama) திரைப்படம் தான் இந்த ‘கான் சிட்டி’.

கான் சிட்டி கதை

சென்னையில் வெவ்வேறு சூழ்நிலைகளில் சிறு சிறு மோசடிகள் (Scams) செய்து போலீசிடம் இருந்து தப்பிக்க ஓடும் சில ஏமாற்றுக்காரர்கள் (Con artists) கர்நாடகாவில் உள்ள முல்கி என்ற கிராமத்தில் ஒன்றாகத் தஞ்சமடைகிறார்கள். அங்கு தங்களை ஒரு குடும்பமாகக் காட்டிக்கொண்டு ‘போலி முகமூடி’யுடன் வாழ்கின்றனர்.

மின்சார வாரியத்தில் மோசடி செய்த சரவணன் (அர்ஜுன் தாஸ்), போலி வாடகை நிறுவன மோசடி செய்த மித்ரா (அன்னா பென்), அறக்கட்டளை என்ற பெயரில் ஏமாற்றும் ஜாக்கி (யோகி பாபு) மற்றும் அவரது தாய் ஜானகி (வடிவுக்கரசி) ஆகியோர் தான் அந்த போலி குடும்பம். மித்ராவின் மாற்றுத்திறனாளி மகன் ஜீவாவை (அகிலன்) இவர்கள் அனைவரும் தங்கள் சொந்தப் பிள்ளை போல வளர்க்கிறார்கள். ஆனால், 7 வருடங்களுக்குப் பிறகு இவர்களின் கடந்த காலம் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி மூலமாக துரத்துகிறது. அவர் சிறுவன் ஜீவாவை கடத்த, அவனை மீட்க இந்த ஏமாற்றுக்காரக் குடும்பம் தங்களின் பழைய புத்தியை கையில் எடுத்து ஒரு இறுதி ‘மெகா மோசடி’யில் (One Last Scam) இறங்குகிறது. அதில் அவர்கள் வென்றார்களா இல்லையா என்பதே மீதிக்கதை.

கான் சிட்டி – ஏமாற்றாத எண்டர்டெய்னர்!

சில லாஜிக் ஓட்டைகள் மற்றும் நீளமான இரண்டாம் பாதி இருந்தாலும், அர்ஜுன் தாஸ் – யோகி பாபு கூட்டணியின் சுவாரஸ்யமான நடிப்பு மற்றும் குபீர் காமெடி காட்சிகளுக்காக இந்த ‘கான் சிட்டி’க்கு குடும்பத்தோடு தியேட்டருக்குச் சென்று தாராளமாக டிக்கெட் எடுக்கலாம்!

Read Also: Angikaaram Movie Review

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
➡அர்ஜுன் தாஸ், வடிவுகரசி, யோகிபாபு, அன்னா பென் நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡காமெடி கூட்டணி
➡ஷான் ரோல்டனின் பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡ புதுமையான மோசடி காட்சிகள்

படத்தில் கடுப்பானவை

➡இராண்டாம் பாதி இன்னும் சுவாரஸ்ய களமாக இருந்திருக்கலாம்
➡யூகிக்கக்கூடிய திரைக்கதை

ரேட்டிங்: ( 3.25 / 5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஅங்கீகாரம் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைசிங் கீதம் தமிழ் திரைப்பட விமர்சனம்