ஜிடி நாயுடு தமிழ் திரைப்பட விமர்சனம்

ஜிடி நாயுடு (2026) – முன்னோட்டம்

‘இந்தியாவின் எடிசன்’ என்று அழைக்கப்படும் கோவையின் பெருமைமிகு கண்டுபிடிப்பாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘GDN’. ‘ராக்கெட்ரி’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு மறக்கப்பட்ட நாயகனின் கதையைத் தேர்ந்தெடுத்து நடித்துள்ளார் மாதவன்.

ஜிடி நாயுடு கதை

1900-களின் தொடக்கத்தில் சாதாரண பின்னணியில் இருந்து வந்து, தனது அளப்பரிய அறிவாற்றலால் பல விசித்திரமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர் ஜி.டி. நாயுடு. ஆங்கிலேயர்கள் மற்றும் அன்றைய இந்திய வரி அதிகாரிகளின் அடக்குமுறைகளை எதிர்த்து, தனது சுயமரியாதையையும் இந்தியர்களின் கண்டுபிடிப்புத் திறனையும் நிரூபிக்க அவர் நடத்திய போராட்டங்களே இப்படத்தின் முதன்மைக் கதைக்களம்.

தமிழ் சினிமா கண்ட சிறந்த பயோபிக் திரைப்படங்களில் ‘GDN’ முக்கிய இடம் பிடிக்கும். நமது வரலாற்று நாயகனைப் பற்றித் தெரிந்துகொள்ள குடும்பத்தோடு திரையரங்குகளில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஊக்கமளிக்கும் திரைப்படம்.

Read Also: The Odyssey Movie Review

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
➡மாதவனின் ஒன் மேன் ஷோ
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡தொழில்நுட்ப நேர்த்தி
➡கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை
➡வசனங்கள்

படத்தில் கடுப்பானவை

➡மெதுவான திரைக்கதை & VFX
➡இரண்டாம் பாதியின் தொய்வு

ரேட்டிங்: ( 3.5 / 5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை‘கஜினி’ பட வில்லன் நடிகர் பிரதீப் ராவத் காலமானார்
அடுத்த கட்டுரைஃபோட்டோகிராபர் தமிழ் திரைப்பட விமர்சனம்