டோரதி (2026) – முன்னோட்டம்
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில், கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் நடிப்பில் செப்டம்பர் 25, 2026 அன்று வெளியாகியுள்ள படம் ‘டோரதி’ (Dorothy).
டோரதி கதை
பள்ளிப் பருவத்திலிருந்தே நெருங்கிய நண்பர்களான கார்த்தி (ரிஷிகாந்த்) மற்றும் சுப்பு (சனந்த்) கிராமத்தில் ரவுடிகளாக வலம் வருகிறார்கள். கார்த்தி வேறு சாதியைச் சேர்ந்தவன் என்பதால் சுப்புவின் தந்தை அவரைத் தாழ்வாகப் பார்க்கிறார். மேலும், சாதி கௌரவத்திற்காகத் தனது மனைவி மற்றும் மகளையே ஆணவக்கொலை செய்த கொடூரமான மனம் படைத்தவர் சுப்புவின் தந்தை.

இந்தச் சூழலில், சுப்புவின் அண்ணன் டோரதியை (கீர்த்தி சுரேஷ்) திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வருகிறான். ஆனால், சில நாட்களில் டோரதி சந்தேகத்திற்கு இடமான முறையில் தூக்கிட்டு இறக்கிறார். இது தற்கொலை அல்ல, தனது தந்தையும் அண்ணனும் செய்த கொலை என்பதை உணர்ந்து சுப்பு கொதித்தெழுகிறான்.
குடும்பத்தின் கொடூரங்களை நினைத்து வேதனைப்படும் சுப்பு, ஒரு கட்டத்தில் தான் ஆண் அல்ல, திருநங்கை என்பதை உணர்ந்து வெளிப்படுத்துகிறான். குடும்ப மானத்தைக் காப்பாற்ற சுப்புவைக் கொல்ல கார்த்தியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. கார்த்தி தன் நண்பனை ஏற்றுக்கொண்டாரா அல்லது கொலை செய்தாரா? என்பதே மீதிக்கதை.

‘டோரதி’ தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ள மிக முக்கியமான, தைரியமான மற்றும் அழுத்தமான முயற்சிகளில் ஒன்றாகும்.
Read Also: The Paradise Movie Review
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡சனந்த் மற்றும் ரிஷிகாந்தின் சிறப்பான பங்களிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡இடைவேளைக் காட்சியும் ஒற்றை ஷாட் (Single-shot) சண்டைக் காட்சியும்.
➡டெக்னிக்கல் தரம்
➡இளையராஜாவின் மிரட்டலான பின்னணி இசை.
படத்தில் கடுப்பானவை
➡உணர்வுபூர்வமான மற்றும் சென்சிட்டிவான கதைக்களம் என்பதால் அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் இது எந்தளவுக்குப் பிடிக்கும் என்பது கேள்விக்குறியே.
ரேட்டிங்: ( 4 / 5 )





































