லெனின் பாண்டியன் தமிழ் திரைப்பட விமர்சனம்

லெனின் பாண்டியன் (2026) – முன்னோட்டம்

இயக்குநர் டி.டி. பாலச்சந்திரன் இயக்கத்தில், ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘லெனின் பாண்டியன்’ (Lenin Pandiyan). சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் கங்கை அமரன், ரோஜா செல்வமணி, ஸ்ரீதா ராவ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லெனின் பாண்டியன் கதை

சிவகங்கை மாவட்ட பின்னணியில் மணற்கொள்ளை மற்றும் கிராமத்துப் பொருளாதாரச் சுரண்டலை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.

அப்பா பணியில் இருக்கும்போதே இறந்ததால், கருணை அடிப்படையில் கதாநாயகன் மாறவர்மன் சுந்தரபாண்டியனுக்கு (தர்ஷன் கணேசன்) காவல்துறை வேலை கிடைக்கிறது. ஆனால், சாதுவான குணமுடைய அவரை சக காவலர்கள் ஏளனம் செய்து எடுபிடி வேலைகளுக்கே பயன்படுத்துகின்றனர்.

மறுபுறம், துரைராசு (கங்கை அமரன்) என்ற எளிய விவசாயி மணற்கொள்ளைக் கும்பலால் தான் ஆசையாக வளர்த்த ஆட்டை இழக்கிறார். மணல் கடத்தலுக்கு எதிராகப் புகார் அளிக்கும் அவருக்கு உயிருக்கு ஆபத்து வர, நீதிமன்றம் அவருக்குப் பாதுகாப்பாக ஒரு காவலரை நியமிக்கிறது. அந்தப் பொறுப்பு நாயகன் மாறவர்மனுக்குக் கிடைக்கிறது. அதிகார பலமும் பணபலமும் படைத்த கூட்டத்திற்கு எதிராக, எளிய மனிதனின் நீதிக்கான போராட்டத்தில் நாயகன் எப்படித் துணை நின்றார் என்பதே மீதிக்கதை.

‘லெனின் பாண்டியன்’ என்பது வணிக ரீதியான ஆடம்பரங்கள் இல்லாமல், எளிய மக்களின் நீதிக்கான போராட்டத்தை அழுத்தமாகப் பேசும் ஒரு நேர்மையான மற்றும் பாராட்டுக்குரிய திரைப்படமாகும்.

Read Also: Meesaya Murukku Movie Review

படத்தில் சிறப்பானவை

➡ஹிப்ஹாப் ஆதியின் எனர்ஜியான நடிப்பு மற்றும் பாடல்கள்.
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் கவரும் நகைச்சுவைக் காட்சிகள்.
➡சினிமா துறையின் பின்னணியை சுவாரஸ்யமாகக் காட்டிய விதம்.
➡முதல் பாகத்தைப் போலவே இதிலும் ஒலிக்கும் உத்வேகம் அளிக்கும் (Motivational) வசனங்கள்.
➡ஹிப்ஹாப் ஆதியின் பின்னணி இசை.

படத்தில் கடுப்பானவை

➡பழக்கப்பட்ட திரைக்கதை
➡சில இடங்களில் வழக்கமான, கணித்துவிடக்கூடிய கதைக்களம்.

ரேட்டிங்: ( 3 / 5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைமீசையை முறுக்கு 2 தமிழ் திரைப்பட விமர்சனம்