லவ் டுடே தமிழ் திரைப்பட விமர்சனம்

லவ்டுடே கதை

கதையின் நாயகன் பிரதீப் (பிரதீப் ரங்கநாதன்) மற்றும் கதையின் நாயகி நிகிதா (இவானா) இருவரும் காதலிக்கின்றனர் இவர்களின் காதலை நிகிதாவின் அப்பாவான வேணு சாஸ்திரியிடம் (சத்யராஜ்) கூறுகின்றனர் , ஆனால் நிகிதாவின் அப்பாவோ அவர்கள் இருவரின் போனை ஒரு நாள் மட்டும் மாற்றிக்கொள்ள சொல்கிறார் அப்படி மாற்றிக்கொண்டால் இருவரும் அவர்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்கிறார் , அதன் பிறகு உங்களுக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே என்கிறார் , இருவரும் போனை மாற்றிக்கொண்டபிறகு இருவரைபற்றியும் பல விஷயங்கள் தெரிகின்றனர், கடைசியில் இருவரும் இணைந்தார்களா ? இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை…
இதனை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அவருக்கே உண்டான பாணியில் அசத்தலாக கூறியுள்ளார்…

படத்தில் சிறப்பானவை
வித்யாசமான கதைக்களம்
யுவனின் இசை
இயக்குனர் பிரதீப்பின் நடிப்பு
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
சிறந்த தொழில்நுட்பம்
அசத்தலான நகைசுவைக்காட்சிகள்

படத்தில் கடுப்பானவை
முகம் சுழிக்கவைக்கும் ஒருசில காட்சிகள்

Rating: ( 3.75/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *