Saaho Teaser Review

சுஜீத் இயக்கத்தில பிரபாஸ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அருண் விஜய், ஜக்கி ஷ்ரோப் மட்டும் பலர் நடிப்பில் வெளிவர இருக்க சாகோ படத்தோட டீஸர் இப்போ ரிலீஸ் பண்ணிருக்காங்க. குறிப்பா பாகுபலி படத்துக்கு பிறகு உலகளவில பிரபலமான பிரபாஸ் இந்த படத்தில நடிச்சிருக்காரு அதனால மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு இருக்கு.

2017ல ஆரம்பிச்ச இந்த படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி னு 3 மொழிகள்ள பிரமாண்ட பட்ஜெட்ல எடுத்திருக்காங்க. வெளிவந்திருக்க டீசர் பல பேருக்கும் ஹாலிவுட் சினிமா டீஸர் பார்த்த அனுபவத்தை கொடுத்திருக்குந்தான் சொல்லணும். அந்தளவுக்கு ஆக்ஷன் சீன் முதல் டீசர் வர எல்லா சீன்லையும் மிரட்டிருக்காங்க.

டீஸர் ஸ்டார்டிங்க்லேயே ஷ்ரத்தா கபூர் “தூக்கமோ சந்தோஷமோ என்கூட share பண்ண யாருமே இல்ல” னு சொல்ராங்க அடுத்த காட்சியில நா இருக்கேனு பிரபாஸ் சொல்லறாரு. இந்த சீன் வச்சி பாக்கும் பொது ஷ்ரத்தா கபூருக்கு பிரபாஸ் ஹெல்ப் பண்றதும் இருக்கு.

இதுக்கப்புறம் நிறைய சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கு. ஒரு ஆக்ஷன் திரில்லர் படமா வர இருக்க இந்த படத்தில நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருக்குனு
இந்த டீஸர் தெரிவிகிறது. முக்கியமா நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், ஜாக்கி இவங்களெல்லாம் படத்தில என்னமாதிரி முக்கியமான கதாபாத்திரத்தில நடிச்சிருக்காங்கனு படம் பார்த்த பிறகுதான் தெரியவரும்.

மொத்தத்தில் saaho படத்தில் பிரபாஸ் எதோ பிரச்சனையில் மாட்டிருக்க மாதிரியும், அந்த பிரச்சனைக்கு காரணமானவங்கள பழி வாங்கற மாதிரியும் இருக்கு.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here