கணம் கதை
கதையின் நாயகன் ஆதிக்கு ( ஷர்வானந்த் ) இசையின் மீது ஆசை ஆனால் வெளியில் பலர் முன் பாடவேண்டும் என்றல் பயத்தில் இவருக்கு பாட வராது , மற்றும் இவரின் தாய் 20 வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் இறந்து விடுவார் ( அமலா ) அதனை நினைத்து தாய் ஏக்கத்தில் இருப்பவர்தான் ஆதி , இவருக்கு இரண்டு நண்பர்கள் இருப்பார்கள் கதிர் ( சதிஷ் ) மற்றும் பாண்டி ( ரமேஷ் திலக் ) இதில் கதிர் திருமணத்திற்கு பெண் தேடி அலைபவராகவும், பாண்டி வீடு பிடித்து கொடுக்கும் வீடு புரோக்கராகவும் இருக்கிறார் ஒரு சமயத்தில் இவர்கள் நாசரை சந்திக்கிரார்கள் அப்போது இவர் ஒரு விஞ்ஞானி என்பது தெரியவருகிறது , அப்போது 28 மார்ச் 1998 அந்த தேதிக்கும் ஆதிக்கும் சம்மந்தம் இருப்பது நாசருக்கு தெரியவருகிறது அது என்னவென்றால் 28 ம் தேதி ஆதியின் அம்மா பிறந்தநாள் அடுத்த நாள் அவர் விபத்தில் இறந்த நாள் , அதேநாளில் நாசருக்கு ஒரு சம்மந்தம் இருக்கிறது, பிறகு நாசர் ஆதியிடம் அவரை அந்த தேதிக்கு அனுப்பிவைப்பதாகவும் , நீ சென்று உன் அம்மாவின் விபத்தை தடுத்து நிறுத்து என சொல்கிறார் கூடவே இவருக்கு வேண்டிய ஒரு செயலையும் செய்ய சொல்கிறார், ஆதியை போலவே அவர்களின் நண்பர்களுக்கும் அவர்களின் சிறுவயதில் மாற்ற வேண்டிய சில விஷயங்கள் இருப்பதால் அவர்களும் இவருடன் இணைகிறார்கள், இவர்கள் 2019 லிருந்து டைம் ட்ராவல் செய்து 1 மார்ச் 1998 அன்று செல்கிறார்கள் அப்படி சென்று இவர்கள் நினைத்ததை முடித்துவிட்டு மீண்டும் 2019 ஆண்டிற்கு திரும்பவும் வந்தர்களா? இல்லையா ? என்பதுதான் மீதி கதை..
இதனை இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் சற்று வித்யாசமாகவும் விறுவிறுப்பாகவும் கூறிஉள்ளார்
Also Read: Captain Movie Review
படத்தில் சிறப்பானவை
கதைக்களம் & திரைக்கதை
இயக்கம்
கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்து அனைவரின் நடிப்பு
ஒளிப்பதிவு
பின்னணி இசை
படத்தில் கடுப்பானவை
சற்று மெல்ல நகரும் கதைக்களம் ( ஆனால் இது பெரிதளவில் பாதிப்பில்லை )
Rating: ( 3.75/5 )