நாணயம் என்றல் இருபக்கம் இருக்கத்தானே செய்யும் !

கொரோனா காரணமாக தற்போது சினிமா துறை பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது.  இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படம் OTT தளத்தில் வெளியாவதற்கு சில எதிர்ப்புகள் வெளியாகின. இது குறித்து, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது “பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் OTT தளத்தில் விற்பணையாகியிருப்பதாகவும், அது திரையரங்குகளுக்கு வராமலேயே அதில் வெளியிடப்படுவதாக செய்திகள் வந்தது. அதைக் கண்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் OTT மற்றும் திரையரங்க வெளியீடு குறித்து தன்னிடம் பலர் கேள்விகேட்கிறார்கள் என்று கூறி அது குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார் பிரபல தயரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி. இதுகுறித்து அவே வெளியிட்ட ட்விட்டர் பதிவில். “OTT மற்றும் திரையரங்க ரிலீஸ் குறித்து பலரும் என்னிடம் கேள்வி கேட்டுவருகின்றனர்.

ஆனால் நான் எந்த பக்கத்தையும் சாராதவள். என்னை பொறுத்தவரை இரண்டுமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போன்றது. நம் அனைவரின் ஒரே எண்ணம் இந்த கொரோனா என்னும் புயலை எப்படி கடப்பது என்பது மட்டுமே” என்று அவர் கூறியுள்ளார்.  இந்நிலையில் ‘பொன்மகள் வந்தாள்’, பென்குயின் உள்பட பல படங்கள் தற்போது OTT தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here