பரோல் தமிழ் திரைப்பட விமர்சனம்

பரோல் கதை

சிறுவயதிலேயே தனது அம்மாவை கேவலமாக பேசிய ஒருவரை கொன்றதால் ஜெயிலுக்கு செல்கிறான் கரிகாலன் ( லிங்கா ) அம்மாவை கூட இருந்து பார்த்துக்கொள்கிறான் இரண்டாவது மகன் கோவலன் ( RS. கார்த்திக்) அண்ணன் தம்பி இருவருக்கும் ஒருவரை ஒருவருக்கு பிடிக்காது இதனால் ஏதாவது ஒரு சண்டை வந்துகொண்டேதான் இருக்கும் , காலங்கள் கழிகின்றன பிறகு கரிகாலன் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் பணத்திற்காக கொலை செய்ய ஆரம்பிக்கிறான் ஆனால் இவனது தனிப்பட்ட விரோதத்திற்காக இரண்டு கொலை செய்கிறான், அந்த கொலையை அவனே ஒப்புக்கொண்டு ஜெயிலுக்கு செல்கிறான் , ஒருநாள் இவரின் அம்மா இறந்துவிடுகிறார், கடைசியில் கரிகாலன் தான் அவருக்கு கொல்லி வைக்க வேண்டும் என்பது அம்மாவின் கடைசி ஆசை அதனால் கோவலன் அண்ணணை பரோலில் வெளியே கொண்டு வர போராடுகிறான் அதில் பல பிரச்சனைகள் வருகின்றன அனைத்தையும் சமாளித்து கரிகாலன் பரோலில் வெளியே வந்தாரா ? இல்லையா ? என்பதும் எதற்காக இவர் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு சென்றார் என்பதும் தான் படத்தின் மீதி கதை
இதனை இயக்குனர் துவராக் ராஜா நார்த் மெட்ராஸ் மக்களின் வாழ்வியலையும் ஒரு நல்ல கதைக்களத்தையும் நமக்கு கொடுத்துள்ளார்

படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த அனைவரின் நடிப்பு
குறிப்பாக RS.கார்த்திக் & லிங்காவின் நடிப்பு
பின்னணி இசை
மக்கள் செல்வனின் குரல்

கடுப்பானவை
சற்று சுற்றி வளைக்கும் திரைக்கதை

Rating: ( 3.25/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *