யசோதா தமிழ் திரைப்பட விமர்சனம்

யசோதா கதை

அப்பா அம்மா இல்லாமல் தங்கையுடன் தனியாக வாழ்ந்துகொண்டிருக்கும் கதையின் நாயகி சமந்தா சிறு சிறு வேலைகளை செய்துகொண்டு வாழ்கிறார், அவரின் தங்கைக்கு உடல் நலக்குறைவு ஏற்ப்படுகிறது அதனை சரி செய்ய பல லட்சம் ரூபாய் செலவாகும் என்பதால் பணத்திற்காக வாடகை தாயாக மாறுகிறார், அப்படி அந்த குழந்தை பிறக்கும் வரையில் வரலக்ஷ்மியின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் அதுதான் நிபந்தனை அப்படி சமந்தா அந்த இடத்திற்கு சென்றதும் ஒரு சில விஷயங்கள் தவறாக நடப்பதை உணர்கிறார் அதனை கண்டு பிடிக்க முயற்சிக்கும் போது அவர்களிடம் மாட்டிக்கொள்கிறார், இது ஒருபுறம் நடக்க மறுபுறம் மாடலிங் செய்யும் பெண் ஒருவர் இறந்துவிடுகிறார் அதன் பின்னனி என்ன என்பதை போலீஸ் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர் அங்கு அவர் இறந்ததிற்கும் இங்கு சமந்தா மாட்டிக்கொண்டதற்கும் என்ன சம்மந்தம் என்பதும் , அங்கு நடக்கும் மர்மம் என்ன என்பதும் , கடைசியில் அங்கு உள்ள பெண்களை காப்பாற்றிக்கொண்டு சமந்தா தப்பித்தாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை
இதனை இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரிஷ் சற்று வித்யாசமான கதைக்களத்தை ஒரு சில ட்விஸ்ட்களுடன் நமக்கு கொடுத்துள்ளனர்

Read Also: Parole Tamil Movie Review

படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
சமந்தாவின் சிறப்பான நடிப்பு
பின்னணி இசை
சண்டைக்காட்சிகள்

படத்தில் கடுப்பானவை
மெல்ல நகரும் முதல்பாதி கதைக்களம்

Rating: (3.25/5)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *