பேட்டைக்காளி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

பேட்டைக்காளியின் கதை

மாடு பிடி வீரராக இருக்கும் கலையரசன் வாடியில் வரும் சில காளைகளை அடக்குவார், இதுதான் இவரின் ஆசை சந்தோஷம் எல்லாம். அப்படி இந்த ஊர் மக்கள் வாடியில் சில காளைகளை பிடிக்க கூடாது என ஊர் கட்டுப்பாடு இருந்தும், தனது வீரத்திற்காகவும், வேறு ஒரு காரணத்திற்காகவும் ஒரு காளையை அடக்குகிறார். அது பக்கத்து ஊர் பெரிய மனிதரின் (வேல.ராமமூர்த்தி ) காளை , இதனால் வேலராமமூர்த்தி கோபம் அடைகிறார் , அந்த காளையும் எதிர்பாராத விதமாக தனது உயிரை மாய்த்து கொண்டதால், இவருக்கு கோபம் இன்னும் அதிகமாகிறது . அதனால் கலையரசனை பழி தீர்க்க திட்டமும் போடுகிறார். கலையரசனின் மாமாவான கிஷோர் கலையரசனை திட்டுகிறார். அதுமட்டுமல்லாமல் வேல.ராமமூர்த்தியிடம் மன்னிப்பும் கேட்க சொல்கிறார், அப்படி அவர் மன்னிப்பு கேட்க செல்லும்போது சில கைகளப்பும் நடக்கிறது. பிறகு கலையசனை யாரோ கத்தியால் குத்தி கொலை செய்துவிடுகிறார். இதற்கு பழி தீர்க்க கலையரசனின் மாமாவான கிஷோர் ஒரு திட்டம் போடுகிறார் , இதெல்லாம் ஒரு புறம் நடந்துகொண்டிருக்க ஆற்றில் அடித்து கொண்டு ஒரு கன்னுகுட்டி வருகிறது, அந்த கன்னுக்குட்டியை ஷீலா ராஜ்குமார் எடுத்து வளர்க்கிறார் , அப்படி இவர் வளர்க்கும் இந்த கண்ணுகுட்டிதான் பேட்டைக்காளி… கலையரசனை கொன்றது யார் ? என்பதும் கிஷோர் அவரது பழியை தீர்த்தாரா? இல்லையா ? என்பதும் தான் முதல் 4 எபிசோடுகளின் கதை….

இது முடிவல்ல, பேட்டைக்காளியின் ஆரம்பம், காத்திருந்து அடுத்த எபிசோடுகளில் காண்போம் பேட்டைக்காளியின் ஆட்டத்தை…

இதனை இயக்குனர் ல.ராஜ்குமார் மிகவும் எதார்தமாகவும் சற்று வித்தியாசமான கதைக்களத்தையும் நம்மக்கு கொடுத்துள்ளார்…

பேட்டைக்காளி ஆஹா ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது

சிறப்பானவை
கதைக்களம்
திரைக்கதை
கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த அனைவரின் நடிப்பு
பின்னனி இசை
குறிப்பாக பேட்டைக்காளியின் தலைப்பு பாடல்
தத்ரூபமான வாடியின் காட்சிகள்

கடுப்பானவை
பெரிதாக ஒன்றும் இல்லை

Rating: ( 4/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *